Top posting users this month
No user |
Similar topics
தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி அதிரடி நீக்கம்: அதிமுகவில் பரபரப்பு
Page 1 of 1

தமிழக அமைச்சரவையில் இருந்து போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
இன்று ஆளுநர் மாளிகை இது தொடர்பாக செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.
அதில், போக்குவரத்துத் துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து செந்தில் பாலாஜி விடுவிக்கப் பட்டுள்ளதாகவும் அவர் வசம் இருந்த போக்குவரத்துத் துறை கூடுதல் பொறுப்பாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தங்கமணி வசம் ஒப்படைக்கப் படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில், அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், செந்தில் பாலாஜி வகித்து வந்த கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்து அவர் விடுவிக்கப்படுவதாகவும் கரூர் மாவட்ட அதிமுக பணிகளை அமைச்சர் தங்கமணியே இனி கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட போது கோயில் கோயிலாக காவடி எடுத்து அதீத பற்றை வெளிப்படுத்தியவர் செந்தில் பாலாஜி என்பது குறிப்பிடத்தக்கது.
யாரும் அசைக்க முடியாத வகையில் தொடர்ந்து 4 ஆண்டுகளாக போக்குவரத்துறை அமைச்சராகவும் இருந்து வந்த செந்தில் பாலாஜி நீக்கப்பட்டது, அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இரவோடு இரவாக அகற்றப்பட்ட பிரபாகரனின் சிலை! தமிழக அரசு அதிரடி
» மோடியின் குண்டு துளைக்காத கார் வர தாமதம்: அதிகாரி அதிரடி பணியிடை நீக்கம்
» அமெரிக்க சிறுமியை பலாத்காரம் செய்த தமிழக மதபோதகர் அதிரடி கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum