Top posting users this month
No user |
Similar topics
ரூபவாஹினிக்கு 176 மில்லியன் இழப்பை ஏற்படுத்திய மகிந்த
Page 1 of 1

கடந்த ஜனாதிபதித் தேர்தல் நேரத்தில் மகிந்த ராஜபக்சவின் பிரச்சார விளம்பரங்களுக்காக வழமைக்கு மீறி வழங்கப்பட்ட விசேட முன்னுரிமைகள் காரணமாக இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்கு 176 மில்லியன் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் இந்த விடயம் சம்பந்தமாக நடத்திய விசாரணைகளின் போதே தெரியவந்துள்ளது.
மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சார விளம்பரங்களை ஒளிபரப்புவது தொடர்பில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய செலுத்தப்பட வேண்டிய கட்டணங்கள் செலுத்தப்படவில்லை.
அத்துடன் மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட கட்டணச் சலுகை ஏனைய வேட்பாளர்களிடம் அறவிடப்பட்ட கட்டணங்களை விட குறைவானது.
நீண்ட தேர்தல் பிச்ரசார விளம்பரம் மற்றும் குறுகிய தேர்தல் பிரச்சார விளம்பரம் என்பவற்றை ஒளிபரப்பியதன் மூலம் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்கு இந்த நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, நகர அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் ஆகிய ஆவணப் பெயர்களில் இந்த விளம்பரங்கள் ஒளிப்பரப்பபட்டுள்ளன.
இந்த சட்டவிரோத நடவடிக்கையை மேற்கொள்ள ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் சந்திரபால லியனகே உள்ளிட்ட அதிகாரிகள் தமது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விசாரணையில் கண்டறியப்பட்ட விடயங்களின் அடிப்படையில், அது குறித்து இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடி விசாரணை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் உள்ளக விசாரணை ஒன்றை நடத்துமாறும் ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திடமும் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் அவ்வாறான விசாரணை நடைபெறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கண்டியில் பரபரப்பை ஏற்படுத்திய நூதன திருட்டு! மக்களுக்கு எச்சரிக்கை
» நிலநடுக்கத்தால் பெரிய இழப்பை சந்திக்கும் சென்னை: ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்
» ரயில்வே திணைக்களத்திற்கு 120 மில்லியன் ரூபாய் நஷ்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum