Top posting users this month
No user |
கட்டாக்காலி நாய்களின் உணவுக்காக ஒரு மில்லியன் ரூபா செலவு செய்த மகிந்த அரசு
Page 1 of 1

கொழும்பு நகரப்பகுதியிலிருந்து அகற்றப்பட்ட நாய்களுக்கு உணவளிக்க 10 இலட்சத்து 9 4 ஆயிரத்து 294 ரூபாவை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கம் செலவு செய்துள்ளது.
இலங்கையில் கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டின் போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஊடக மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் கயந்த கருணாதிலக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்துள்ளார்.
மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
கொழும்பிலிருந்து பிடிக்கப்பட்ட 203 நாய்கள் பேஸ்லைன் வீதி மற்றும் மகசின் வீதியில் வைக்கப்பட்டிருந்தன, மாநாடு முடிந்ததன் பின்னர் அவற்றை விடுவித்து விட்டனர்.
அந்த நாய்களின் உணவுக்காக 10 இலட்சத்து 94 ஆயிரத்து 294 ரூபாயை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் செலவு செய்துள்ளது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண மறுப்பு தெரிவித்தார்.
குறித்த நாய்கள் வில்பத்து மற்றும் அதனை சூழவுள்ள காடுகளுக்கு கொண்டு சென்று விடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த நாய்கள் வாகனங்களில் மோதி இறந்து விட்டதாகவும், இதற்காக எதிர்கட்சி தலைவர் வருந்த தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ஏனெனில் அவரது மனைவி மிருகங்களிடத்தில் அன்பு கொண்டவர் என்பதினால் இந்த நாய்கள் உயிரிழந்தமை அவர்களின் குடும்பத்தில் பாரிய பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் இந்த நாய்களை விடுவித்ததன் பின்னர் இதன் பராமரிப்பிற்காக ஒரு மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாக ஏன் கூறவேண்டும் என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
மாநகர சபையினால் குறித்த நாய்களுக்கு ரெபீஸ் எனும் தடுப்பூசி ஏற்றப்பட்டதற்கான தகவல்கள் வெளியாகியுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க அவரின் கேள்விக்கு பதிலுரைத்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum