Top posting users this month
No user |
Similar topics
மைத்திரியின் வரவேற்புக்கு ஒன்பது மில்லியன் ரூபா செலவு!
Page 1 of 1

அமெரிக்காவிலிருந்து நாடுதிரும்பிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கான வரவேற்பு வைபவத்துக்கு ஒன்பது மில்லியன் ரூபா செலவழிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு இரண்டொரு நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியிருந்தார்.
ஜனாதிபதியின் ஐ.நா. விஜயத்துக்கு சமாந்தரமாக இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான மனித உரிமைகள் ஆணையத்தின் கடும்போக்கில் சற்று தளர்வு ஏற்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணையிலிருந்து நாடும், ராணுவத்தினரும் பாதுகாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ஜனாதிபதிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதன்போது விமான நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்தும் அரச தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டது.
அத்துடன் அமைச்சர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றுதிரண்டு ஜனாதிபதிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், விமான நிலையத்தில் சர்வ மத வழிபாடுகள் மற்றும் ஆசிவழங்கல் நிகழ்வுகளும் நடைபெற்றிருந்தது.
இவ்வாறாக அமெரிக்காவிலிருந்து நாடுதிரும்பிய ஜனாதிபதிக்கு விமான நிலையத்தில் அளிக்கப்பட்ட பிரமாண்ட வரவேற்புக்கு சுமார் ஒன்பது மில்லியன் ரூபா செலவிடப்பட்டிருந்ததாக தற்போது தெரிய வந்துள்ளது.
நல்லாட்சி தொடர்பான நம்பிக்கையுடன் வாக்களித்த மக்கள் இது போன்ற நிகழ்வுகளால் ஏமாற்றமடைந்திருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

» கட்டாக்காலி நாய்களின் உணவுக்காக ஒரு மில்லியன் ரூபா செலவு செய்த மகிந்த அரசு
» மத்தள விமான நிலையத்தில் 65 மில்லியன் ரூபா மீட்பு
» நாமலுக்கு வழங்கிய 5 மில்லியன் ரூபா குறித்து விசாரணை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum