Top posting users this month
No user |
Similar topics
வாய்ச் சவடால் காட்டுகிறாரா பன்னீர் செல்வம்? கருணாநிதி அதிரடி
Page 1 of 1

மக்களின் சார்பில் கேள்விகளை எழுப்பினால் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் என்னை பேசக்கூடாது என எச்சரிக்கை செய்வதா? என்று திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆலந்தூர் கூட்டத்தில் நான் முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றிய என்னுடைய பேச்சிற்குத் தான் பன்னீர்செல்வம் எச்சரிக்கை செய்திருக்கிறார்.
நான் அப்படி என்ன தவறாகப் பேசிவிட்டேன்? உடல் நலம் குன்றியிருப்பதாகப் பரவலாகப் பேசப்படும் முதல்வரை உடல் நலம் பேணுவதற்கு ஓய்வெடுக்க வேண்டும் என்று கூறியது தவறா?
தமிழகத்தின் முதல்வர் மாநில மக்களின் நலனுக்காக எப்படியெப்படி எல்லாம் பணியாற்றிட வேண்டும் என்று கருத்து தெரிவிக்க பன்னீர்செல்வம் போன்றவர்கள் வாழ்கின்ற தமிழகத்தில் எனக்கு உரிமை இல்லையா?
ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றி செய்தி வெளியிடாத பத்திரிகைகள், சமூக வலைதளங்கள் இருக்கின்றனவா?
அரசு சார்பில் அறிக்கை வெளியிட வேண்டும் என கேட்காத அரசியல் தலைவர்கள் உண்டா?
அந்த செய்தியில் உண்மை இல்லை என்று கருதினால், அமைச்சர் பன்னீர்செல்வம் தன் பெயரிலேயே, ‘‘முதல்வருக்கு உடல் நலம் நன்றாகத்தான் இருக்கிறது, அன்றாடம் அலுவலகம் வராததற்கு மட்டும் காரணம் என்னவென்று எனக்கு தெரியவில்லை’’ என்றெல்லாம் அறிக்கை வெளியிடுவது தானே?
இன்னும் சொல்லப் போனால் 1.7.2015 அன்று நடைபெற்ற, முதல்வர் ஜெயலலிதாவே ஏற்பாடு செய்த இப்தார் விருந்து நிகழ்ச்சியில் இதே நிதியமைச்சர் பன்னீர்செல்வம் படித்த ஜெயலலிதாவின் உரையில், “திடீரென்று ஏற்பட்ட உடல் நலக் குறைவின் காரணமாக இந்த விழாவிற்கு என்னால் நேரில் வர இயலவில்லை’‘ என்று தெரிவிக்கவில்லையா?
ஜெயலலிதா சட்டப்பேரவை உறுப்பினராக 4.7.2015 அன்று பதவியேற்ற பிறகு எத்தனை நாட்கள் ஆகின்றன?
இந்த இடைவெளியில் அவர் தலைமைச்செயலகத்திற்கு எத்தனை நாட்கள் வந்து அரசுப் பணிகளை மேற்கொண்டார்?
கருணாநிதி, ஜெயலலிதாவைப் பற்றி பேசுவதை நிறுத்த வேண்டும் என்று நிதியமைச்சர் எனக்குத் தடை விதித்து எச்சரிக்கை செய்வது; மக்களை நிந்திப்பதாகாதா?
மக்களாட்சி என்பதை இழிவுபடுத்துவதாகாதா? இன்னும் சொல்ல வேண்டுமானால், ஆலந்தூர் கூட்டத்தில் நான் அமைச்சர் பன்னீர்செல்வத்தை பாராட்டித்தான் பேசினேன். பரிதாபப்பட்டுத்தான் பேசுவதாகக் குறிப்பிட்டேன்.
அவரைப் பாராட்டுவதும், பச்சாதாபப்படுவதும் தவறு என்று அமைச்சர் எனக்குச் சுட்டிக் காட்டியிருக்கிறாரா?
அல்லது தனக்கு வேண்டிய பதவி உயர்வு வராமல் போய்விடுமே என்று வாய்ச் சவடால் காட்டுகிறாரா?
வாக்களித்த மக்களுக்கு ஆற்றிட வேண்டிய பணிகளை மறந்து, வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தையும் முடக்கி, எல்லாத் துறைகளையும் செயலற்றதாக ஆக்கி, மாநில நிர்வாகத்தை கடன் என்னும் கடலுக்குள் தள்ளி சட்டம் ஒழுங்கை சாக்காட்டுக்கு அனுப்பி, தமிழகத்தின் பொது நலத்தை முழுதும் புறக்கணித்து, தமது சுயநலத்தைச் சுற்றியே வட்டமிட்டுக் கொண்டிருக்கும் அதிமுக அரசுக்கு வாக்களித்த மக்களின் சார்பில் கேள்விகளை எழுப்பினால், ஓ.பன்னீர்செல்வம் என்னை பேசக்கூடாது என்று எச்சரிக்கை செய்வதா ஜனநாயகம்? என்று கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» களைகட்டும் ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: வீதி வீதியாக வாக்கு சேகரிக்கும் பன்னீர் செல்வம்
» ஒரு ரூபாயாக இருந்தாலும், ஒரு கோடி ரூபாயாக இருந்தாலும் ஊழல் ஊழல்தான்: கருணாநிதி அதிரடி
» பன்னீர் ரசம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum