Top posting users this month
No user |
Similar topics
திமுக தேர்தலை புறக்கணித்த காரணம் புரிகிறதா? கருணாநிதி அதிரடி!
Page 1 of 1

ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவதற்கு காவல் துறை அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் துணை போவதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி இது குறித்து கேள்வி பதில் வடிவில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், கடந்த 4 ஆண்டு காலத்தில் எதையெல்லாம் செய்வோம் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பாக ஜெயலலிதா செய்தாரோ, அதில் 100ல் பத்து சதவிகிதம் கூட நிறைவேற்றப்பட வில்லை.
அவை வெறும் வாக்குறுதிகளாக, அறிவிப்புகளாக மட்டுமே உள்ளன. கொடுத்த வாக்குறுதிகளை 60 சதவிகிதம் நிறைவேற்றினாலே அவை சாதனைகளாகக் கருதப்படும்.
ஆட்சி முடியப் போகும் இறுதி ஆண்டில் இவை அனைத்தையும் செய்ய காலமும் இடம் கொடுக்காது, நிதி நிலைமையும் சரியில்லை. இனி என்ன சாதிக்க முடியும்?" இந்தப் பதில் என்னுடையது அல்ல; வார இதழ் ஒன்றில் வெளியானது.
ஜெயலலிதாவின் வருமானத்திற்கு மீறிய சொத்து பத்து சதவிகிதத்திற்கும் குறைவு தான் என்று நீதிபதி குமாரசாமி தெரிவித்திருக்கிறார்.
ஆனால் நாளேடு ஒன்று அவர் ஒவ்வொரு முறை தேர்தலில் நிற்க வேட்பு மனு தாக்கல் செய்கிறபோதும், ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு இரண்டு மடங்காகிறது என்று எழுதியது.
ஆங்கில நாளேடு ஒன்றோ, ஜெயலலிதாவின் வங்கியிருப்பு நான்கு ஆண்டுகளில் ஐந்து மடங்காகியுள்ளது என்று தலைப்பிட்டுள்ளது.
ஆர்.கே. நகர் பற்றி "தொகுதியில் ஒளி மயம் - தூங்கும் தேர்தல் ஆணையம்" என்ற தலைப்பில் வார இதழ் ஒன்று எழுதிய கட்டுரையில் ஒரு சில பகுதிகள் இதோ, "சாலைகள் அனைத்தையும் புதுப்பிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். முக்கியமான சாலைகளை ஒரே நாளில் போட்டு விடுகிறார்கள்.
இத்தனை நாளாகப் பாழடைந்திருந்த கட்சி அலுவலகங்களை எல்லாம் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தண்டையார்பேட்டை நகராட்சி நான்காவது மண்டல அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு, தரமான சாலைகள் போடப்பட்டிருக்கின்றன.
மண்டல அலுவலகம் முதல், எங்கு பார்த்தாலும் பச்சை நிறம்தான் காணக் கிடைக்கிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் இவ்வளவு ஜரூர் காட்டுவது தேர்தல் கமிஷனுக்கு மட்டும் தெரியாமல் இருப்பதுதான் "ட்விஸ்ட்".
பொதுப்பணித் துறை வாகனங்களும், வருவாய்த் துறை வாகனங்களும் ஆர்.கே. நகரைச் சுற்றி வந்து கொண்டிருக்கின்றன.
அமைச்சர்கள் அனைவரும் அங்கு வந்து விட்டனர். தேர்தல் ஆணையமும் களத்தில் இறங்க வேண்டும்" இது அந்த வார இதழ் எழுதியது.
மற்றொரு வார இதழ் எழுதியுள்ள வாசகங்கள், "பேரிடர் நிவாரண டீம் கூட அத்தனை வேகமாகச் செயல்பட்டிருக்குமா என்று தெரியவில்லை.
ஆர்.கே. நகரில் ஜெ. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முதல் நாள் இரவு முழுவதும் அமைச்சர்கள் - அதிகாரிகள் மேற்பார்வையில் மின்னல் வேகத்தில் பணிகள் நடந்து கொண்டிருந்தன.
மாநகராட்சி மண்டல அலுவலகத்திற்கு அவசர அவசரமாக ஜெ.வுக்குப் பிடித்த பச்சை நிறம் பூசப்பட, புது ஏ.சி. மெஷினும் பொருத்தப்பட்டது.
பொலிசாரும், அதிகாரிகளும் சாலை போடுவதற்கான பொருள்களை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.
ஒரு தலைவரின் வேட்பு மனுத் தாக்கலுக்காக அலுவலகத்தையே புதுப்பொலிவாக மாற்றி அமைத்த வரலாற்றை முதன் முறையாகப் படைத்திருக்கிறது தேர்தல் கமிஷன் என்று எழுதியுள்ளது.
தி.மு.கழகமும், எதிர்க்கட்சிகளும் அந்தத் தொகுதியைப் புறக்கணித்ததன் காரணம் இப்போது புரிகிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» திமுக தலைவர் கருணாநிதி இல்லத்திற்கு சென்று சந்தித்த விஜயகாந்த்: அரசியல் உலகில் பரபரப்பு
» வாய்ச் சவடால் காட்டுகிறாரா பன்னீர் செல்வம்? கருணாநிதி அதிரடி
» தேமுதிக சஸ்பெண்ட்: திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு….சட்டசபையில் அமளி துமளி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum