Top posting users this month
No user |
Similar topics
ஐ.தே.க ஆட்சியமைத்தால் பாரியளவு வெளிநாட்டு முதலீடு கிடைக்கும்: விஜயதாச ராஜபக்ச
Page 1 of 1

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் நிறுவப்பட்டால் பாரியளவு வெளிநாட்டு முதலீடு கிடைக்கும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பில் வெளிநாடுகளுக்கு காணப்படும் நம்பிக்கையற்ற தன்மையினால் அதிகளவு முதலீடுகளோ கடன்களோ கிடைக்கவில்லை.
கடந்த ஆறு மாத காலத்திலும் இலங்கையில் ஸ்திரமற்ற ஓர் ஆட்சி நிலவியதாகவே வெளிநாடுகள் கருதின. இதனால் உதவிகள் பெருமளவு கிடைக்கவில்லை. எனினும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் இந்த நிலைமையில் மாற்றம் ஏற்படும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சிலர் துரோகி> காட்டிக் கெடுத்தவர் என குற்றம் சுமத்தினாலும் அரசியல் ஞானத்துடன் மிகுந்த தெளிவுடன் அவர் செயற்பட்டு வருகின்றார்.
அண்மையில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் மூலம் இந்த விடயம் தெளிவாகியுள்ளது.
கடந்த ஆட்சியாளர்களினால் வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள பணம் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், சர்வதேச உதவியுடன் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணம் மீள கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு பத்திரிகையொன்றுக்கு நேர்காணலில் விஜயதாச ராஜபக்ஸ இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தற்போதைய அரசாங்கம் நீதிமன்ற தீர்ப்புக்களுக்கு மதிப்பளித்து செயற்படுகின்றது: விஜயதாச ராஜபக்ச
» ராஜபக்ச மீண்டும் வந்தால் வெளிநாட்டு படை இலங்கையில் தரையிறங்கும்: விக்ரமபாகு கருணாரத்ன
» தில்ருக்ஷி நீக்கப்படமாட்டார்: விஜயதாச தெரிவிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum