Top posting users this month
No user |
Similar topics
வீரவசனம் பேசிய மோடி வியாபம் மெகா ஊழலில் தமது திருவாயை திறக்கவில்லை ஏன்? இளங்கோவன் கேள்வி
Page 1 of 1

வியாபம் மெகா ஊழலில் சம்பந்தப்பட்டவர்களை கண்டறிய சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
கல்வித் தகுதிகளை மோசடியாக வெளியிட்டதற்காக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணி மீது வழக்கு, மகாராஷ்டிரா மாநில குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரூ.206 கோடிக்கு பகிரங்க டெண்டர்கள் விடாமல் விருப்புரிமை அடிப்படையில் வழங்கியதில் குற்றச்சாட்டு, சத்தீஷ்கர் மாநில முதலமைச்சர் ராமன் சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ரூ.36 ஆயிரம் கோடிக்கு பொது விநியோகத்துறையில் உணவுப் பொருட்கள் கொள்முதல் செய்ததில் ஊழல், இப்படி ஒவ்வொரு ஊழல் குற்றச்சாட்டுகளாக பா.ஜ.க.வினர் மீது வெளிவருகிறது.
மேலும், குற்றவாளியான லலித் மோடியின் வெளிநாட்டு பயணத்திற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சட்டவிரோதமாக உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதுமட்டுமல்லாது லலித் மோடிக்கு உதவியதாக வசுந்தரா ராஜே மீதும் குற்றச்சாட்டு வெடித்தது.
தற்போது மத்தியபிரதேச மாநிலத்தில் தொழில்முறை தேர்வு வாரியம் அரசு பணிகளுக்கான தேர்வுகளை நடத்தியதில் 'வியாபம்' என்று அழைக்கப்படுகிற மெகா ஊழல் நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து மத்தியபிரதேச உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டு மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை விசாரித்து வருகிறது.
இந்த விசாரணையை நடத்திய மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் அருண் ஷர்மாவும், பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர்களை பேட்டி கண்ட தொலைக்காட்சி நிருபர் அக்ஷய் சிங்கும் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளனர்.
அதேபோல் இந்த ஊழலில் சம்மந்தப்பட்டவர்கள் இதுவரை 46 பேர் மர்மமான முறையில் மரணமடைந்த அதிர்ச்சி செய்தி நாட்டையே உலுக்கி வருகிறது.
இந்த செயல்பாடுகளுக்கு பின்னால் மத்தியபிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் சம்மந்தப்பட்டுள்ளனர்.
நாட்டையே உலுக்கிய வியாபம் மெகா ஊழலில் சம்மந்தப்பட்டுள்ள குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன்னால் நிறுத்துவதற்கு உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் மத்திய புலனாய்வுத்துறையின் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரிக்க வேண்டும். அப்படி விசாரித்தால் தான் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்.
ஊழலற்ற ஆட்சி நடத்தப்போவதாக தேர்தல் நேரத்தில் வீரவசனம் பேசிய நரேந்திர மோடி இதுவரை வெளிவந்துள்ள எந்த ஊழலுக்கும் தமது திருவாயை திறந்து பதில் சொல்லியதில்லை.
அடிக்கடி வெளிநாடு சுற்றுப்பயணம் செய்தில் அக்கறை காட்டுகிற நரேந்திர மோடி இந்தியாவையே உலுக்கிக் கொண்டிருக்கிற மெகா ஊழலுக்கு பதில் சொல்ல தயங்குவது ஏன்? என்று அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நடிகரும், பத்திரிகையாளருமான 'சோ' ராமசாமியை நேரில் சந்தித்து பேசிய மோடி
» மகிந்த அரசாங்கத்தில் ஊழலில் ஈடுபட்டவர்களின் ஆதாரங்களைக் கோருகிறார் அரியம் எம்.பி
» ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நியாயமாக நடக்கவில்லை: இளங்கோவன் குற்றச்சாட்டு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum