Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


எந்த அரசியல்வாதிக்கும் அனுமதியில்லை: அரசை எதிர்பார்த்து ஏமாந்த மக்களின் அதிரடி முடிவு!

Go down

எந்த அரசியல்வாதிக்கும் அனுமதியில்லை: அரசை எதிர்பார்த்து ஏமாந்த மக்களின் அதிரடி முடிவு!  Empty எந்த அரசியல்வாதிக்கும் அனுமதியில்லை: அரசை எதிர்பார்த்து ஏமாந்த மக்களின் அதிரடி முடிவு!

Post by oviya Thu Jul 02, 2015 2:47 pm

அரியானாவில் ஒரு பாலத்துக்காக 40 ஆண்டு காலம் அரசாங்கத்திற்காக காத்திருந்த மக்கள், தற்போது தாங்களே இணைந்து பாலத்தை கட்டியுள்ளனர்.
சிர்சா மாவட்டத்தில் பாலத்துக்காக பொது மக்கள் சுமார் 40 ஆண்டு காலம் பொருத்திருந்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பாலத்தை நாங்களாகவே கட்ட துவங்கிய பின்பும் யாரும் எங்களுக்கு உதவ முன்வரவில்லை.

இந்த பிரச்சனைக்காக தேவிலால் முதலமைச்சராக இருந்த காலத்திலிருந்து தற்போது முதலமைச்சராக இருக்கும் மனோகர் லால் கத்தார் வரை நாங்கள் சந்திக்காத ஆட்களே இல்லை என்று கூறியுள்ளனர்.

இதனையடுத்து பொறுமையிழந்த அப்பகுதி மக்கள் தாங்களே பாலத்தை கட்டும் பணியை கையில் எடுத்தனர்.

அந்த பாலம் அமைய உள்ள பணியாரி கிராமத்தை சேர்ந்த வயதானவர் முதல் விதவை உதவித்தொகை வாங்குவோர் வரை அனைவரும் நிதியுதவி அளித்தனர்.

அனைவரும் சேர்ந்து 1 கோடி ரூபாய் சேர்த்து, கடந்த வருடம் ஏப்ரலில் பாலத்திற்கான கட்டுமான பணிகளை துவக்கினர்.

தற்போது அங்குள்ள காகர் ஆற்றின் மேல், 214 அடி நீளத்தில், 16 அடி அகலத்தில் பாலத்தை மக்களே கட்டி முடித்துள்ளனர்.

இந்த பாலத்தால் 40 கி.மீ. தூரமாக கடக்க வேண்டிய தூரத்தை வெறும் 10 கி.மீ. குறைக்க முடிந்துள்ளது.

அதே போல் அக்கம்பக்கத்திலிருக்கும் 9 கிராமங்களிலும் 5 ஆயிரம் பேர் தாமாக முன்வந்து இதற்காக ஒன்று கூடி நிதியுதவி செய்தனர்.

இந்நிலையில் அக்கிராமத்தை சேர்ந்த மக்கள் அடுத்து வர உள்ள தேர்தல்களை புறக்கணிக்க இவர்கள் முடிவு செய்துள்ளனர்.

மேலும், எந்த ஒரு அரசியல்வாதியும் இந்த பாலத்தை உபயோகிக்க அனுமதிக்கப்போவதில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum