Top posting users this month
No user |
சுற்றாடலை அழிக்க யாருக்கும் அனுமதியில்லை: ஜனாதிபதி மைத்திரி
Page 1 of 1

எதிர்வரும் காலங்களில் அரசியல்வாதி, வர்த்தகர், மற்றும் கடத்தல்காரர்கள் சுற்றாடலை அழிப்பதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு பொலன்னறுவை மெதிரிகிரியவில் நடைபெற்ற நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.
புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று நாட்டில் இதுவரையிலும் அடர்ந்த காடுகள் இல்லை எனவும், யுத்தம் இடம்பெற்ற வட, கிழக்கில் மாத்திரம் 20 வீத காடுகள் காணப்படுகின்றன எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் காலங்களில் சுற்றாடலை பாதுகாப்பதற்காக கடுமையான சட்டங்கள் பிரயோகிக்கப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
வில்பத்து வனாந்தரத்தின் ரம்மியம் சீர்குலைக்கப்பட்டு விட்டது: ஜனாதிபதி
வில்பத்து வனாந்தர பகுதியின் ரம்மியம் சீர்குலைந்திருப்பதை தனது இரு கண்களினாலும் பார்த்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சுற்றாடல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு இன்று பொலநறுவையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு அவர் உரையாற்றுகையில்,
இதனை தான் கடந்த வாரம் யாழ்ப்பாணம் சென்றபோது, விமானத்தில் இருந்து பார்வையிட்டேன்.இது சில அரசியல்வாதிகள் எடுத்த தவறான தீர்மானங்களின் விளைவால் ஏற்பட்டது.
அரசியல்வாதியோ அல்லது வியாபாரியோ எவராக இருந்தாலும் சூழலையும், அதன் இயற்கைத் தன்மையையும் அழிக்க இடமளிக்கமாட்டேன்.
இது மாத்திரமன்றி தனது ஆட்சிக் காலத்தில் இயற்கை தன்மையை அழிக்க முற்படுபவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum