Top posting users this month
No user |
Similar topics
மக்களின் எதிர்பார்ப்பே எமது எதிர்பார்ப்பாகும்: பெ. இராஜதுரை - மக்களின் சக்திமிக்க அமைப்பாக த.மு.கூட்டணி: எஸ்.ஸ்ரீதரன்
Page 1 of 1

மக்களின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கிறதோ, அதுவே எமது எதிர்பார்ப்பாகும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சிரேஸ்ட சட்டத்தரணியுமான பெ. இராஜதுரை தெரிவித்தார்.
ராகலை சென்வேனாட்ஸ் தோட்டத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்னும் 60 வருடங்கள் பின்நோக்கிப் பார்த்தால் அந்த அறுபது வருடங்களில் இங்குள்ள எம்மில் எத்தனை பேர் இருப்போம் என்பது எங்களுக்கு தெரியாது.
நிச்சயமாக நாங்கள் இருக்க மாட்டோம். ஆனால் எமது குழந்தைகள், உறவுகள் இந்த இடத்தில் இருக்கத்தான் போகின்றன.
அவர்களுக்கு நாங்கள் எதனை விட்டுவைத்து போகின்றோம் என்பதை பற்றியே நாங்கள் யோசிக்கின்றோம். இதனாலேயே இந்த அரசியல் செயற்பாட்டில் களமிறங்கவேண்டிய கட்டாயம் வந்திருக்கின்றது.
எதிர்வரும் நாட்களில் வெளிநாட்டு இறக்குமதிகள், பிற மாவட்டங்களில் இருந்து வருகைத்தருபவர்கள், பெரும் வியாபாரிகள் என்போர் உங்களின் வாக்குரிமையை களவாட இங்கு வருவார்கள். இவ்வாறான திருடங்களின் செயற்பாடுகளால் நாங்கள் தோல்வியடைவோம்.
அவர்களோடு எங்களுக்கு போட்டியிட முடியாது. அவர்கள் எங்களின் பலவீனங்களை பார்த்து சரியாக காய்களை நகர்த்தி எங்கள் வாக்குகளை களவாடி சென்று பின்னர் அடுத்த தேர்தலில் முகங்காட்டுவார்கள்.
நாங்கள் அப்போதும் அவர்களுக்கு நாங்கள் வாக்களிப்போம் என்பது உறுதியாக அவர்களுக்கு தெரியும். இந்த கபட விளையாட்டை இம்முறை அவர்கள் ஆட இடமளிக்க வேண்டாம்.
நாங்கள் எமது தொழிலில் பலருக்கு உதவிகளை செய்துள்ளோம். அதில் திருப்தி காண முடியவில்லை. அதனாலேயே அரசியலுக்குள்ளும் நுழைந்தோம்.
ஆனால் இந்த அரசியல் செயற்பாடுகளை பார்க்கும்போது இதிலிருந்து விலகிவிடலாம் என்றே தோன்றியது. ஆனால் எங்களோடு இருக்கின்ற நண்பர்கள் என்னை தொடர்ந்து இந்த பயணத்தில் அவர்களுக்கு தலைமைத்துவத்தை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே தொடர்ந்தும் நாங்கள் செயற்பட தீர்மானித்து செயற்படுகின்றோம்.
இம்முறை நடைபெறும் தேர்தலில் நாங்கள் தெரிவு செய்யும் நபர்கள் இன்னும் ஐந்து ஆண்டுகள் இருக்கப்போகிறார்கள். இருந்தால் பரவாயில்லை இவர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்பது எமக்கு தெரியாது.
இந்த விடயத்தில் நீங்கள்தான் சிந்தித்து செயற்பட வேண்டும். இதில் உங்கள் முடிவை சரியாக எடுப்பீர்கள் என நாங்கள் நம்புகின்றோம் என்றார்.
மக்களின் சக்திமிக்க அமைப்பாக தமிழ் முற்போக்குக் கூட்டணி- எஸ்.ஸ்ரீதரன்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் கண்டி மாவட்ட தமிழ் மக்கள் சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரைத் தெரிவு செய்வதில் தமிழ் முற்போக்குக் கூட்டணி முனைப்புடன் செயற்படுமென்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடவுள்ள ஜனநாயக மக்கள் முன்னணியின் மத்திய மாகாணசபை உறுப்பினர் வேலுகுமாருக்கு ஆதரவுத் தெரிவித்து நாவலப்பிட்டி கடியலேன நகரில் இடம் பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பெருந்தோட்டத்துறை அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல , தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோகணேசன் , மத்திய மாகாணசபை உறுப்பினர்களான வேலுகுமார் , ராஜாராம் ,ஐக்கிய தேசிய கட்சியின் நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளர் ஆனந்த அலுத்கமகே உட்பட பலர் கலந்து கொண்டனர்.
எஸ்.ஸ்ரீதரன் தொடர்ந்து தெரிவிக்கையில்,
கண்டி மாவட்டத்தில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் வாக்காளர்கள் உள்ள போதும் கடந்த இரண்டு தசாப்தகாலமாக தமிழ் மக்கள் சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவாகவில்லை.
இதனால் கண்டி மாவட்டத்தமிழ் மக்கள் பிறரில் தங்கி வாழவேண்டிய நிலைமை ஏற்பட்டது. குறிப்பாக நாவலப்பிட்டி தொகுதி தமிழ் மக்கள் பல்வேறு நெருக்குதலுக்கு உள்ளாகி வந்தனர்.
இந்தத் தொகுதியில் தமிழ் மக்கள் பாதுகாத்த நிலம் வெளியாருக்குப் பலாத்காரமாக பிரித்துக் கொடுக்கப்பட்ட சம்பவங்கள் அதிகரித்தமை அனைவரும் அறிந்த விடயமாகும்.
கண்டி மாவட்டத்தமிழ் மக்களின் அரசியல் உரிமையைப் பெற்றுக்கொடுப்பதற்காக தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர்கள் ஒன்றிணைந்து கண்டி மாவட்டத்தில் தமிழர் ஒருவரைப் பாராளுமன்றத்துக்கு அனுப்பும் வியூகத்தினை அமைத்துள்ளனர்.
அந்த வகையில் அனைவரினதும் நன்மதிப்பைப் பெற்ற மத்திய மாகாணசபை உறுப்பினர் வேலுகுமாரை தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் களமிறக்கவுள்ளோம். இவரின் வெற்றிக்காக எமது கூட்டணி முனைப்புடன் செயற்படும்.
இவ்வாறானதொரு நிலையில் கண்டி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான வேட்பாளர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல ,தொகுதி அமைப்பாளர் ஆனந்த அலுத்கமகே இவர்களுக்கும் தமிழ் மக்கள் தமது ஆதரவை வழங்க வேண்டும்.
இன்று இந்த நாட்டில் வாழுகின்ற சிறுபான்மை மக்கள் நிம்மதியாக வாழுவதற்கு நல்லாட்சி வழிசமைத்துள்ளது. இந்த நல்லாட்சியை ஏற்படுத்துவதில் தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர்கள் அரும்பாடு பட்டுள்ளனர்.
ஆகவே எதிர்வரும் பொதுத் தேர்தலைத் தொடர்ந்து இலங்கையில் வாழுகின்ற மலையகத்தமிழ் மக்களின் சக்திமிக்க அமைப்பாக தமிழ் முற்போக்குக் கூட்டணி திகழப்போகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» எமது மக்களின் சகஜ வாழ்வை பாதிக்கும் காரணிகள் ஐ.நா அறிக்கையில் ஆராயப்படவில்லை: விக்னேஸ்வரன்
» தேர்தலின் பின் மலையகத்தில் அராஜகம் புரிய நினைத்தவர்களின் நிலைமை பரிதாபத்துக்குரியதாகியுள்ளது: ம.மா.உ.எஸ்.ஸ்ரீதரன்- ஆசிரியர் நியமனங்கள், 16 ஆயிரம் கொடுப்பணவு: கணபதி கனகராஜ் வலியுறுத்து
» வடக்கு கிழக்கு அரசியல்வாதிகளை பின்பற்றுங்கள் மலையக தலைமைகளுக்கு இராஜதுரை எம்.பி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum