Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


திருட சென்ற வீட்டில் சமைத்து சாப்பிட்ட கொள்ளையர்கள்

Go down

திருட சென்ற வீட்டில் சமைத்து சாப்பிட்ட கொள்ளையர்கள் Empty திருட சென்ற வீட்டில் சமைத்து சாப்பிட்ட கொள்ளையர்கள்

Post by oviya Mon Jun 29, 2015 3:06 pm

ரெய்ச்சூர் அருகே வீட்டிற்கு திருட சென்ற திருடர்கள், வீட்டில் தங்க நகைகள், ரொக்கம் இல்லாததால் சமையல் செய்து சாப்பிட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரெய்ச்சூர் அருகே உள்ள சக்திநகர் பகுதியை சேர்ந்த சந்திரசேகர், தனியார் நிறுவனத்தின் பொறியாளர்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன் வெளியூரில் நடைபெற்ற உறவினர் திருமணத்தில் கலந்து கொள்ள அவர் குடும்பத்துடன் சென்றுள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நிகழ்ச்சியை முடித்துவிட்டு அவர்கள் கொண்டு வீட்டுக்கு சென்றபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த துணிகள் கலைந்து இருந்தது.

அதுமட்டுமல்லாமல், சமையல் அறையில் சாதம், சாம்பார் சமைக்கப்பட்டு சிலர் சாப்பிட்டு சென்றிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் பொலிசில் இது குறித்து புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பொலிசார் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தி மர்மநபர்களை தேடிவருகின்றனர்.

பொலிசார் இது குறித்து கூறுகையில், பூட்டிய வீட்டில் திருட வந்த மர்மநபர்கள் பீரோவில் தங்க நகைகள், ரொக்கம் எதுவும் கிடைக்காததால் வீட்டில் சமையல் செய்து சாப்பிட்டு சென்றுள்ளனர்.

அவர்களின் கைரேகை பதிவு செய்யப்பட்டுள்ளதால் விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum