Top posting users this month
No user |
Similar topics
ஆப்கான் பாராளுமன்றத்தின் மீதான தாக்குதலுக்கு ஜனாதிபதி கண்டனம்
Page 1 of 1

ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
பயங்கரவாதத்தினை ஒழித்து நாட்டின் குடியுரிமைக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களை இல்லாதொழிப்பது குறித்து அனைவரது பங்களிப்பு தொடர்பில் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய கூட்டமைப்பு (SAARC) என்னும் வகையில் ஆப்கான் பாராளுமன்றத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். இது மிகவும் வெறுக்கத்தக்கதொரு பயங்கரவாதச் செயலாகும்.
இவ்வாறான தாக்குதல்கள் நாட்டின் குடியுரிமையைச் சீர்குலைக்கும் செயற்பாடுகளாகும். அத்துடன் இவர்களுக்கு எதிராக போராடும் ஆப்கான் இராணவத்தினர் எந்த வகையிலும் எந்த நேரத்திலும் பின்வாங்க கூடாது.
பயங்கரவாதத்துக்கு எதிராக மூன்று தசாப்தங்களாக போராடி இன்று அதனை வெற்றிகரமாக முற்றாக ஒழித்துவிட்டு அனைத்து மக்களும் ஒன்றிணைந்து இன்று நிம்மதியுடன் வாழ்கின்றோம்.
அவ்வகையில் பயங்கரவாதத்தின் வடுக்கள் வேதனைகள் என்ன என்பது பற்றி தெளிவாக அறிந்த நாடு என்ற வகையில், இத்தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் குடும்பத்தினர் என அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
அத்துடன் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமாகவும் இறைவனை பிரார்த்திக்கிறோம் என ஜனாதிபதி அவ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மியான்மார் ரொஹிங்கா முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலை! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம் !
» டிப்பர் வாகனத்துடன் மோதி குதிரை பலி!- ஆசிரியரின் தாக்குதலுக்கு இலக்காகி மாணவன் படுகாயம்
» பூநகரியில் பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்காகிய பொதுமகன் வைத்தியசாலையில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum