Top posting users this month
No user |
Similar topics
நாகப்பட்டினத்தில் பிரபாகரனுக்கு மீண்டும் சிலை வைக்கப்படும்: சீமான் அதிரடி அறிவிப்பு!
Page 1 of 1

விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு நாகப்பட்டினத்தில் மீண்டும் சிலை வைப்போம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
சீமான் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாகப்பட்டினம் மாவட்டம் தெற்குப் பொய்கை நல்லூர் அய்யனார் கோவில் வளாகத்தில் தேசியத் தலைவர் பிரபாகரன் சிலையை நிறுவி வீரத்தின் அடையாளமாக வழிபட்டிருக்கிறார்கள்.
தமிழ் உணர்வாலும் தலைவர் மீது கொண்ட பற்றாலும் தன்னுடைய சொந்த நிலத்தில் ஒருவர் நிறுவியிருந்த சிலையைக் காவல் துறையினர் அப்புறுப்படுத்தி இருக்கிறார்கள்.
குல தெய்வம் அய்யனார் இன தெய்வம் பிரபாகரன் என எண்ணியே தலைவர் பிரபாகரனுக்கு அங்கே சிலை வைக்கப்பட்டிருக்கிறது.
இதை அப்புறப்படுத்த காவல்துறைக்கு எந்த விதத்திலும் உரிமை கிடையாது.
தமிழ்த் தேசிய இனத்தின் வீரமிகு அடையாளமாக, வரலாற்று வடிவமாக, காலம் தந்த கம்பீரமாக பிரபாகரனை மனதில் ஏந்தி நிற்கும் தமிழ் பிள்ளைகள் தங்களின் உடல் சதையில் அவருடைய உருவத்தை வரைந்து வைத்திருக்கிறார்கள்.
உள்ளத்தில் மட்டும் அல்லாது தங்கள் இல்லத்திலும் வரவேற்பு அறையில் புகைப்படங்களாக மாட்டி வைத்திருக்கிறார்கள்.
பார்க்கிற போதெல்லாம் வீர உணர்வு கொள்ள அலைபேசி முகப்பிலும் முகநூல் உள்ளிட்ட இணையப் பக்கங்களிலும் தலைவர் பிரபாகரன் படத்தை வடிவமைத்து வைத்திருக்கிறார்கள்.
இல்லத்து நிகழ்வுகளுக்கான அழைப்பிதழ்களிலும், சுவரொட்டிகளிலும், பதாகைகளிலும் தலைவர் படத்தை பிரசுரித்து உணர்வை வெளிப்படுத்துகிறார்கள்.
நிலத்தில் நிறுவப்பட்டிருந்த தலைவரின் சிலையை அகற்றியவர்களால் கோடிக்கணக்கான தமிழ் மக்களின் மனதில் நிறுவப்பட்டிருக்கும் எண்ணத்தை என்ன செய்ய முடியும்.
எவ்விதக் காரணமும் இல்லாமல் தலைவர் பிரபாகரனின் சிலையை அகற்றியிருப்பது ஒவ்வொரு தமிழ்ப் பிள்ளைகளின் உணர்வுகளையும் ஊனமாக்கும் செயல்.
சாதி மதங்களாகப் பிளந்து, தாழ்வு மனப்பான்மையால் தாழ்ந்து கிடந்த தமிழ் மக்கள், நம்மால் எதுவும் முடியாது என முடங்கிப் போய் கிடந்தார்கள்.
அத்தகைய இழிநிலையை மாற்றி நம்மால்தான் முடியும் என்கிற போர்குணத்தையும் தமிழுணர்வையும் ஒவ்வொரு தமிழனின் மனதில் ஊட்டி, நெஞ்சுரத்தோடு நிமிர வைத்தவர் பிரபாகரன்.
அவர் வழி பரவும் உணர்வுகள் ஒருமித்த எழுச்சியாகக் கிளம்பிவிடக்கூடாது என்பதற்காகவே இத்தகைய ஒடுக்குதல் நடவடிக்கைகளை அரசுத் தரப்பு பாய்ச்சி வருகிறது.
தமிழ் பிள்ளைகளின் பேச்சுக்கும் செயலுக்கும் தான் தடைபோட முடியும். ஆனால், அவர்களின் சிந்தனைக்கும் கனவுக்கும் தடை போட எப்படி முடியும்.
தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு பிரபாகரன் சிலைய நிறுவிய இடத்திலேயே மறுபடியும் வைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையேல், அதே இடத்தில் பிரபாகரனின் சிலையை நாம் தமிழர் கட்சியே மறுபடியும் நிறுவும் என்பதை ஆணித்தரமாக சொல்லிக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நடிகர் சிவாஜி சிலை விவகாரம்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி கேள்வி
» தமிழக சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டி: சீமான் அறிவிப்பு
» இரவோடு இரவாக அகற்றப்பட்ட பிரபாகரனின் சிலை! தமிழக அரசு அதிரடி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum