Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் குழந்தைகளின் சடலங்கள்: தலைமறைவான தந்தை

Go down

பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் குழந்தைகளின் சடலங்கள்: தலைமறைவான தந்தை Empty பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் குழந்தைகளின் சடலங்கள்: தலைமறைவான தந்தை

Post by oviya Thu Jun 04, 2015 1:17 pm

சென்னையில் பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் 2 குழந்தைகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
மதுரவாயல், காவல் நிலையம் அருகே உள்ள எம்.எம்.டி.ஏ. காலனியில், வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் 2வது மாடியில் ரவி (40) என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி, இருவரும் வழக்கறிஞர்கள்.

இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில வருடங்களாக பிரிந்து வாழ்கின்றனர்.

இவர்களுக்கு பிரியதர்சினி (13) என்ற மகளும், பிரபு (12) என்ற மகனும் இருந்தனர்.

கடந்த 28ம் திகதி ரவியையும், அவரது 2 குழந்தைகளையும் அக்கம்பக்கத்தினர் பார்த்துள்ளனர். அதன்பிறகு அந்த வீடு பூட்டியே கிடந்துள்ளது.

இந்நிலையில், நேற்று காலை ரவியின் வீட்டில் கடும் துர்நாற்றம் வீசியதால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் மதுரவாயல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.

கட்டிலில் ரவியின் மகள் பிரியதர்சினி, மகன் பிரபு இருவரும் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்துள்ளனர்.

பொலிசார் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ரவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது அது அனைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மதுரவாயல் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில், குடும்ப பிரச்சனை காரணமாக 2 பேரும் பிரிந்து வாழ்வதும், குழந்தைகளை தன்னுடன் அனுப்ப வேண்டும் என்று மகேஸ்வரி நீண்ட நாட்களாக கேட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாகவே 2 பேருக்கும் இடையே மோதல் இருந்து வந்துள்ளது.

சம்பவம் பற்றி கேள்விப்பட்ட மகேஸ்வரி, சிதம்பரத்தில் இருந்து நேற்று இரவு சென்னை வந்துள்ளார்.

மகேஸ்வரியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ரவி தனது குழந்தைகளை கொன்று விடுவேன் என்று தொலைபேசியில் மிரட்டியதாக தெரிவித்துள்ளார்.

மகேஸ்வரியுடன் குழந்தைகள் சென்று விடக்கூடாது என்பதால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே இருவரையும் ரவி பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே அடைத்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

மேலும், தலைமறைவாக உள்ள ரவி பிடிபட்டால்தான் இருவரின் மரணத்திற்கான உண்மையான காரணம் என்னவென்று தெரியவரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum