Top posting users this month
No user |
Similar topics
கம்யூனிஸ்ட் குமாரசாமியும்! வாசுதேவ நாணயக்காரவும்!
Page 1 of 1

எங்கள் நாட்டில் வாசுதேவ நாணயக்காரவை நினைக்கும் போதெல்லாம் 25 வருடங்களுக்கு முன்னர் படித்த கம்யூனிஸ்ட் குமாரசாமி என்ற சிறுகதைதான் நம் ஞாபகத்துக்கு வரும்.
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் கம்யூனிஸ்ட் குமாரசாமி என்றொரு சிறுகதை படித்த ஞாபகம்.
கம்யூனிஸ்ட் குமாரசாமி என்பவர் நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறார். நிறுவனத்திற்கு மிகவும் விசுவாசமானவர். நிறுவனத்தின் நிதியைக் கையாள்கின்ற பணியை அவரே செய்து வந்தார்.
சிறிய தொகைப் பணமே அவரின் கையாளுகைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. ஒருநாள் மிகப்பெரியதொரு தொகையை நிறுவனம் கம்யூனிஸ்ட் குமாரசாமியிடம் கொடுத்தது.
அவ்வளவுதான். மறுநாள் குமாரசாமியைக் காணவில்லை.ஆள் தலைமறைவு; நிதிமோசடி என்பதாக குமாரசாமியின் கதை பரவிப் போகிறது.
சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் சாதகமாக அமையாதவரை கம்யூனிஸ்ட் குமாரசாமி நேர்மையாக இருந்தார். அதிக பணம் கையில் கிடைத்த போது கம்யூனிஸ்ட் குமாரசாமியும் காலை வாரி விட்டார் என்பதுதான் இச் சிறுகதையின் கருப்பொருள்.

ஆம், வாசுதேவ நாணயக்கார ஒரு நல்ல மனிதர், நல்ல அரசியல்வாதி; தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கின்ற ஒரு நியாயவாதி என்பது தமிழர்களின் நிலைப்பாடு.
அதேநேரம் வாசுதேவ நாணயக்கார பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்ள முடியாமல் தவித்தார். தொகுதி வாரித் தேர்தல் முறைமையில் வாசுதேவ நாணயக்காரவுக்கு 400, 500 வாக்குகளே கிடைத்தன.
தமிழர்களுக்காக வாசுதேவ நாணயக்கார கதைப்பதால்தான் அவருக்கு சிங்கள மக்கள் வாக்களிக்கவில்லை என்று தமிழர்கள் கருதிக் கொண்டனர்.
எனினும் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகிய போது வாசுதேவ நாணயக்காரவை அழைத்து தனது ஆலோசகராக நியமித்தார்.
கொழுத்த சம்பளம், வாகன வசதிகள் அரியதொரு வாய்ப்பு தனக்குக் கிடைத்ததாகக் கருதிய வாசுதேவ நாணயக்கார, ஜனாதிபதி மகிந்தவின் ஆலோசகர் என்ற பதவியோடு நல்ல அரசியல்வாதி என்ற பெயரை துறந்து கொண்டார்.
தமிழர்களுக்காகக் கதைப்பது, நீதிக்காக குரல் கொடுப்பது ஆலோசகர் என்ற பதவியை பழுதாக்கி விடும் என்று நினைத்த வாசுதேவ, மகிந்த ராஜபக்சவுக்கு விருப்பமான முறையில் கதைக்கத் தலைப்பட்டார்.
அவரில் ஏற்பட்ட மாற்றங்கள் மகிந்தவுக்கு அவர் மீதான நம்பிக்கையை ஏற்படுத்த, வாசுதேவ நாணயக்காரவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி, அமைச்சர் பதவி என்பன வழங்கப்பட்டன.
இப்போது ஒட்டுமொத்தத்தில் வாசுதேவ மனம்மாறிய மனிதராகி விட்டார். கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தியாக வேண்டும் என முடிவு செய்தார். தமிழர்களுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தார்.
தற்போது பதவியை இழந்துள்ள மகிந்த ராஜபக்சவை எப்படியும் ஆட்சிக்குக் கொண்டுவர வேண்டும் என வாசுதேவ கடும் பிரயத்தனம் செய்து வருகிறார்.
நிலைமை எப்படி இருக்கிறது பார்த்தீர்களா? சந்தர்ப்ப சூழல் சாதகமாக அமையாதவரை வாசுதேவ நாணயக்கார நல்ல மனிதராக இருந்தார். பதவி, பணம், படோபகாரம் தேடிவந்த போது வாசுதேவவும் கம்யூனிஸ்ட் குமாரசாமியாக மாறிவிட்டார். இதுதான் நிலைமை.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வாசுதேவ, சுசில் பிரேமஜயந்தவுக்கு சவால்
» ஐ.ம.சு.கூட்டமைப்பின் தலைமையை உடனடியாக விட்டுக்கொடுத்தமை தவறு!- வாசுதேவ
» தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum