Top posting users this month
No user |
Similar topics
தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்
Page 1 of 1

இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் ஸ்தீரமான தீர்வு காண வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநாடு நேற்றைய தினம் நிறைவடைந்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் நிறைவடைந்து 6 ஆண்டுகள் கழிந்த போதிலும் தமிழ் மக்கள் முகங்கொடுத்து வரும் பிரச்சினைகள் இன்னும் நிறைவடையவில்லை என குறித்த மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைக்கு முடிவு காண்பது தொடர்பாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் வாக்குறுதிகளை வழங்கியதற்கமைய சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும் பிரச்சினைகள் தொடர்ந்த வண்ணமேயுள்ளன.
இலங்கை அரசாங்கம் 13வது அரசியல் சட்ட திருத்தத்தை நிறைவேற்றி வட, கிழக்கு மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்க வேண்டும், சிங்கள மக்களை போன்று தமிழ் மக்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும்.
அத்துடன் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை அகற்ற வேண்டும், 2009ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் பக்கசார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்,
ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் நியமித்த நிபுணர்கள் குழு வழங்கிய பரிந்துரைகள் நிறைவேற்றப்படவேண்டும்.
இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்ல விரும்பினால் அவர்கள் அங்கு சென்று வாழ கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டும், அதனை இந்திய அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் உறுதி செய்ய வேண்டும்.
இலங்கையில் புதிய அரசியல் சூழ்நிலை இடம்பெறுவதனால் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு பரஸ்பர பேச்சுவார்த்தையின் மூலம் விரைவில் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இலங்கையில் போர்க்குற்றம்! சர்வதேச விசாரணையை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
» சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காண்பேன்: யோகேஸ்வரன் வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களுக்கு உறுதி
» மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான முயற்சி: இந்திய மத்திய அரசாங்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum