Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஜெயலலிதா முதல்வராக பதவியேற்பு: தொடங்கப்பட்ட நலத்திட்டங்கள்...திறக்கப்பட்ட அம்மா உணவகங்கள்

Go down

ஜெயலலிதா முதல்வராக பதவியேற்பு: தொடங்கப்பட்ட நலத்திட்டங்கள்...திறக்கப்பட்ட அம்மா உணவகங்கள் Empty ஜெயலலிதா முதல்வராக பதவியேற்பு: தொடங்கப்பட்ட நலத்திட்டங்கள்...திறக்கப்பட்ட அம்மா உணவகங்கள்

Post by oviya Mon May 25, 2015 12:57 pm

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜெயலலிதா, திறக்கப்படாமல் இருந்த அம்மா உணவகங்கள் உள்பட பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, 5வது முறையாக தமிழக முதலமைச்சராக நேற்று பதவியேற்றுக் கொண்டார், அவருடன் 28 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

பொறுப்பேற்ற பின்னர், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சாலை மேம்பாட்டுக்கான சிறப்புத் திட்டம், தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், பேரூராட்சிப் பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய குடும்பங்களுக்கான வீட்டு வசதித் திட்டம், 1,274 எதிர்மறை சவ்வூடு பரவுதல் நிலையங்கள் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம் மற்றும் மகளிரை குடும்பத் தலைவராகக் கொண்ட நலிவுற்ற குடும்பங்களுக்கான சிறப்புத் திட்டம் ஆகிய திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.

அதைத் தொடர்ந்து, சென்னை, சேலம், திருவாரூர், விழுப்புரம், பெரம்பலூர், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, நாகர்கோவில் உள்பட பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த 201 அம்மா உணவகங்களை காணொளி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

மேலும், வெளிச்சந்தையில் உயர்ந்து வரும் துவரம் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்புகளின் விலையினைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அரை கிலோ துவரம் பருப்பு 53.50 ரூபாய்க்கும், அரை கிலோ உளுந்தம் பருப்பு 'ஏ' ரகம் 56 ரூபாய்க்கும், 'பி' ரகம் 49.50 ரூபாய்க்கும் விற்பனை செய்யும் புதிய திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

அதேபோல், காவல்துறைக்கு புதிய வாகனங்களையும், கடலோர பாதுகாப்பு படையினருக்கான ரோந்து வாகனங்களையும் முதல்வர் ஜெயலலிதா வழங்கியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum