Top posting users this month
No user |
Similar topics
அரசாங்கம் கல்விக்கு அதிக பணம் செலவு செய்கின்றது: வே.இராதாகிருஷ்ணன்
Page 1 of 1

அரசாங்கம் இன்று கல்விக்கு அதிக பணம் செலவு செய்து வருவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மஸ்கெலியா மவுஸ்ஸாக்கலை தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட பொதுவாசிகசாலை கட்டிடத்தை நேற்று மக்களிடம் கையளிக்கும் வைபவத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அரசாங்கம் கல்வி நடவடிக்கைகளில் அதிகளவு அக்கறை செலுத்தி வருவதும், பாடசாலைக்கு தேவையான வளங்களை பெற்றுக்கொள்வதற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதும் பாராட்டதக்க விடயமாகும்.
அண்மையில் மலையக பகுதியில் உள்ள பாடசாலைகளுக்கு உதவி ஆசிரியர் நியமனத்திற்கான விண்ணப்ப படிவங்கள் கோரிய போது பதினான்காயிரம் விண்ணப்பதாரிகள் விண்ணப்பித்திருந்தனர்.
இதில் பன்னீராயிரம் பேர் சித்தி பெற்ற போதிலும் நேர்முக பரீட்சையின் போது ஒன்பதாயிரம் பேர் தெரிவு செய்யப்பட்டனர்.
எனினும் இதிலும் அதிகமானவர்களுக்கு பொது அறிவு பற்றிய அறிவு காணப்படாத நிலை இருந்தமை ஒரு வேதனைக்குரிய விடயமாகும்.
அத்துடன் தற்கால சமுதாயத்தினர் பொது அறிவினை தேடிக்கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை என்பதினாலேயே இவ்வாறான பிரச்சினைகள் எழுகின்றன இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்காலத்தில் எங்களுடைய சமூகத்தில் கல்வி பயில்கின்றவர்களும் பொது அறிவில் கூடிய அக்கறை செலுத்த வேண்டிய தேவைப்பாடு உள்ளது.
இதுவேளை வட, கிழக்கில் இன்று யுத்தம் முடிவுக்கு வந்த பின் அப்பகுதியில் உள்ள மக்கள் தங்களுடைய காணி உரிமை, வீட்டு உரிமை பெற்றுக்கொள்வதில் அக்கறை காட்டுகின்றனர்.
இதன் காரணமாக இவர்களின் வேதனையை அறிந்த ஜனாதிபதி அவர்களுக்கான காணி, வீடுகளை வழங்குவதில் மும்மரமாக செயற்பட்டு வருகின்றார்.
200 வருட காலமாக மலையக மக்கள் காணி வீட்டு உரிமை இல்லாமல் அடையாளம் இல்லாதவர்களாக வாழ்ந்து வந்தமை அனைவரும் அறிந்த உண்மையாகும்.
மலையக மக்கள் எதிர்நோக்கி வந்த பிரச்சினைக்கு ஜனாதிபதி அவர்கள் உறுதி மொழி வழங்கியதையடுத்து இன்று இவர்களுக்கான காணி மற்றும் தனி வீடு அமைக்கும் திட்டத்தினை செயல்முறைக்கு கொண்டு வந்துள்ளனர்.
எனவே எதிர்காலத்தில் மலையக பகுதிகளில் மட்டுமல்லாமல் ஏனைய மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கும் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கப்போவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» புது வடிவம் பெறும் அலரி மாளிகை - ஒரு நாளைக்கு பெருந்தொகை பணம் செலவு
» ஐ.தே.க மற்றும் ஜே.வி.பி சூழ்ச்சி செய்கின்றது: அனுருத்த பல்லேகம
» வறுமையை காரணம் காட்டி பிள்ளைகளின் கல்விக்கு முட்டுக்கட்டையிடாதீர்கள்: அமீர் அலி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum