Top posting users this month
No user |
பாடசாலைகளில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வேன்: வீ.இராதாகிருஷ்ணன்- மலையக குடியிருப்புகளுக்கு விடுதலை கிடைக்குமா?
Page 1 of 1

ஹற்றன் கல்வி வலய பணிமனையின் கல்வி அதிகாரிகள், ஆசிரியர்களோடு பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் மற்றும் பிரச்சினைகள் சம்மந்தமான கலந்துரையாடல் இராஜாங்க கல்வி அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று பொஸ்கோ கல்லூரியில் இடம்பெற்றது.
குறைபாடுகளை கேட்டறிந்த அமைச்சர் இந்த குறைபாடுகளை 100 நாள் வேலைத் திட்டத்தில் செய்ய முடியாவிட்டாலும், இந்த வேலை திட்டத்தில் உள்வாங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக இராஜாங்க கல்வி அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் இதன்போது தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஹற்றன் கல்வி வலயத்தில் 8 வருடத்திற்கு மேல் ஒரே பாடசாலையில் கற்பித்து கொடுத்த ஆசிரியர்களை கல்வி அமைச்சின் சுற்று நிருபத்தின் படி குறித்த கல்வி வலயத்தில் சில பாடசாலைகளுக்கு கடந்த வருடம் இரண்டாவது தவணை விடுமுறைக்கு முன் மாற்றம் செய்துள்ளதாகவும்,
சில ஆசிரியர்கள் தான்க்கு கிடைத்த பாடசாலைகளுக்கு செல்லாமல் கடமையாற்றிய பாடசாலையிலேயே சில அரசியல்வாதிகளின் உதவியோடு எந்தவிதமான கல்வி நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் பாடசாலை நாட்களில் காலையில் கையொப்பம் இட்டபின் அவர்களின் தனிப்பட்ட சொந்த வேலைகளில் ஈடுபட்டு மீண்டும் பாடசாலை முடிந்தவுடன் மாலையில் கையொப்பம் இட்டு செல்வதாகவும்,
சில ஆசிரியர்கள் சில கல்வி அதிகாரிகளினதும் பாடசாலைகளின் அதிபர்களினதும் ஒத்துழைப்போடு கடமையாற்றிய பாடசாலையிலேயே எந்தவிதமான கல்வி நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் இருப்பதாக தனக்கு முறைபாடு கிடைத்துள்ளதாக அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணனின் தெரிவித்தார்.
எனினும் குறித்த ஆசிரியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததோடு ஆசிரியர்களின் நியமனங்களை பற்றியும் தமிழ் பாடசாலைகளில் காணப்படும் குறைபாடுகளையும் பற்றியும் இந்த அரசாங்கத்தின் ஊடாக நிவர்த்தி செய்வதாக இதன்போது அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் அமைச்சர் உட்பட மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.இராஜாராம் கலந்து கொண்டார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum