Top posting users this month
No user |
Similar topics
பதவியேற்கும் முன்பே மக்களுக்கு போக்குவரத்து நெரிசலை பரிசாக அளித்த ஜெயலலிதா: குஷ்பூ அதிரடி
Page 1 of 1

ஜெயலலிதா முதல்வராக பதவியேற்கும் முன்பே மக்களுக்கு போக்குவரத்து நெரிசலை பரிசாக அளித்துள்ளார் என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா நாளை தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில், சென்னை திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நடக்கவுள்ள இந்த பதவியேற்பிற்காக மாநிலம் முழுவதிலும் இருந்து அதிமுகவினர் சென்னைக்கு வந்த வண்ணமே உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 7 மாத காலமாக வீட்டை விட்டு எங்குமே வெளியில் வராத ஜெயலலிதா இன்று தனது போயஸ் கார்டன் வீட்டில் இருந்து வெளியேறி ஆளுநரை சந்தித்து பேசியுள்ளார்.
அதன் பிறகு அவர் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.
ஜெயலலிதா வீட்டை விட்டு வெளியே வந்ததால் நகரின் பல்வேறு இடங்களிலும் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
கிண்டி, வள்ளுவர் கோட்டம், ஸ்டெர்லிங் ரோடு ஆகிய பகுதிகளில் இருந்து அண்ணாசாலை செல்லும் சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கிண்டியில் சுமார் 5000க்கும் அதிகமான இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தன.
பேருந்தில் பயணிகள் படிகளில் தொங்கிக்கொண்டே சென்றபோதும், இதை ஒழுங்குபடுத்த காவல்துறை இல்லாததால் பொதுமக்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர்.
மேலும், அதிமுக தொண்டர்களையும், நிர்வாகிகளையும் வழிநடத்துவதில் கவனம் செலுத்தும் காவல்துறை பொதுமக்கள் நலனில் அக்கறை காட்டத் தவறிவிட்டது என்று பொதுமக்கள் கவலை வெளியிட்டனர்.
இந்நிலையில் இது குறித்து நடிகை குஷ்பு டிவிட்டரில் தமிழகத்தில் ஜெஜெ திரும்பிவந்துள்ளதால் அவர் பதவியேற்கும் முன்பே கிடைத்துள்ள முதல் பரிசு போக்குவரத்து நெரிசல்.
மேலும், அவரை மகிழ்ச்சிபடுத்த புதிதாக போடப்பட்ட சாலைகளை தோண்டி பேனர்களை வைத்துள்ளனர் என்றும் நாளை இதைவிட மோசமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மக்களுக்கு குறைந்த விலையில் வீடுகள்: முதல்வர் ஜெயலலிதா அதிரடி அறிவிப்பு
» நாளை காலை 11 மணிக்கு பதவியேற்கும் ஜெயலலிதா: 28 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்பு
» 49 மாணவிகளுக்கு தொடர் பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர்கள்: பொலிசார் அதிரடி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum