Top posting users this month
No user |
மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் மைத்திரி தீவிரம்
Page 1 of 1

நூறு நாள் வேலைத்திட்டத்தின் நிறைவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார்.
நூறு நாள் வேலைத்திட்டத்தின் வெற்றி என்பதற்கு அப்பால் சர்வதேசத்துடனான உறவில் இலங்கை வெற்றி பெற்றுள்ளது என்ற செய்தி முக்கியப்படுத்தப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அதாவது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் காலத்தில் சர்வதேச நாடுகளுடனான இலங்கையின் உறவு மிகவும் மோசமாக இருந்தது.இலங்கை தனது உள்நாட்டு மக்களையே கொன்றொழித்த மிகவும் மோசமான நாடு என்ற கருத்தே சர்வதேசம் முழுவதிலும் இருந்தது.
ஆனால் அதனை முறியடித்து சர்வதேசத்தின் உதவியை தாராளமாகப் பெறுகின்ற அளவில் நாம் வெற்றி கண்டுள்ளோம் என்பது ஜனாதிபதி மைத்திரி ஆற்றிய உரையின் சாராம்சமாகும்.
சர்வதேசத்துடனான உறவில் இலங்கை வெற்றி கண்டுள்ளது எனக் கூறியதற்குள் ஒன்றுக்கு மேற்பட்ட வகையில் பொருள் கொள்ள முடியும். எதுவாயினும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை கைது செய்ததன் மூலம் மைத்திரியின் அரசு சர்வதேச சமூகத்திற்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
அதேநேரம் 19வது திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு முன்னதாக பசில் ராஜபக்வை கைது செய்ததன் ஊடாக மகிந்தவின் ஆதரவாளர்களுக்கு மைத்திரி ஒரு செய்தி சொல்கிறார்.
அதாவது 19வது திருத்தச் சட்டமூலத்தை நீங்கள் ஆதரிக்கத் தவறினால் மகிந்த மீதும் அவரது சகோதரர்கள் மீதும் சுமத்தப்படும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் உங்கள் மீதும் திசைதிரும்பும் என்பதே அதுவாகும்.
எனவே 19வது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு ஆதரவு தரமறுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பசில் ராஜபக்சவின் கைதை அடுத்து தமது முடிவில் முக்கிய மாற்றம் செய்வர் என்று நம்பலாம்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது முன் வைக்கப்பட்ட இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணை நடத்தப்படவிருந்த வேளையில் மகிந்தவுக்கு ஆதரவான பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர். இலஞ்ச ஊழல் தொடர்பில் விசாரணை இடம்பெறுவதை எதிர்ப்பது என்பது சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை தடுப்பதற்கு சமமானதாகும்.
இந்நிலையில் ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பில் மகிந்தவை விசாரிக்கக் கூடாது என்று ஆர்ப்பாட்டம் செய்த பாராளுமன்ற உறுப்பினர்கள் யார் என்பது இப்போது ஐயம் தெளிவுற இனம் காணப்பட்டுள்ளது.
மகிந்தவுக்கு ஆதரவாக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர் என்பதை விட குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக மகிந்த நாட்டைக் குழப்புகிறார் என்ற கருத்தியலும் உண்டு.
நிலைமை இதுவாக இருக்கையில் பசில் ராஜபக்சவை கைது செய்தன் மூலம், கோத்தபாய ராஜபக்ச விரைவில் கைது செய்யப்படலாம் என்ற எச்சரிக்கையுடன் நிலைமை கட்டுக்கு வரக்கூடியதான சூழமைவு தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் 19வது திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக பிரதமர் பதவி முதன்மை பெறும் என்ற அடிப்படையில் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தனது கட்சி சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை நெருக்கியடித்து 19வது திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற கடும் பிரயத்தனம் செய்வார்.
ஆக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற பாடுபடுவதுதான் இங்கு வரவேற்கத்தக்க விடயமாகும்.
அதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிப் பதவி தனக்குக் கிடைத்த போதும் அந்தப் பதவியில் சில வருடங்களேனும் இருந்துவிட்டு அதிகாரத்தைக் குறைப்போம் என்று நினைக்காமல் ஜனாதிபதித் தேர்தலின் போது பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிப்படி நிறைவேற்று அதிகாரங்களை குறைக்க வேணடும் என நினைப்பது மைத்திரியின் உயர்ந்த பண்பை காட்டுவதாகும்.
19வது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் எதிர்க்கின்ற வாய்ப்பு உள்ள போதிலும் அதனை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த நினைக்காமல் எப்படியேனும் 19 வது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றி அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறைமையை பலம் இழக்கச் செய்வதில் தீவிரமாக இருக்கும் ஜனாதிபதி மைத்திரி வித்தியாசமானவர் என்பதை ஏற்றுத்தானாக வேண்டும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum