Top posting users this month
No user |
Similar topics
மக்களுக்கு குறைந்த விலையில் வீடுகள்: முதல்வர் ஜெயலலிதா அதிரடி அறிவிப்பு
Page 1 of 1

சென்னையில் குறைந்த வருவாய் பிரிவு மக்கள் வாங்கக்கூடிய வகையில் ரூ.20 லட்சத்துக்கும் குறைவான விலையில் குடியிருப்புகள் அரசு மூலம் விற்பனை செய்யப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இது தொடர்பாக முதலவர் ஜெயலலிதா விதி எண் 110-ன் கீழ் இன்று வாசித்த அறிக்கையில், குறைந்த வருவாய் பிரிவு மக்கள் வாங்கக் கூடிய விலையில் சென்னை அம்பத்தூரில் அனைத்து வசதிகளுடன், இரு படுக்கை அறைகளுடன் கூடிய 2,300 குடியிருப்புகள் தோராயமாக 380 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்படும்.
ஒரு குடியிருப்பின் விலை 20 லட்சம் ரூபாய்க்குக் குறைவாக நிர்ணயம் செய்யப்படும். மேலும்அரசு அலுவலர்களுக்கு சொந்த வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு அரசு அலுவலர்களுக்கு சென்னை பாடிகுப்பம் மற்றும் வில்லிவாக்கம் பகுதியில் 500 பன்னடுக்கு, மாடி குடியிருப்புகள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்படும்.
ஒவ்வொரு குடியிருப்பும் கழிப்பறைகளுடன் கூடிய இரண்டு படுக்கை அறைகள், ஒரு சமையலறை மற்றும் ஒரு உட்காரும் மற்றும் உணவு அருந்தும் கூடம் உடையதாக கட்டப்படும். ஒரு குடியிருப்பின் பரப்பளவு ஏறக்குறைய 700 சதுர அடியாக இருக்கும். இக்குடியிருப்புகளுக்கான கட்டுமானம் இந்த நிதியாண்டில் தொடங்கப்படும்.
இதேபோல் அனைத்துத் தரப்பு மக்களின் வீட்டு வசதித் தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு, சென்னை, காஞ்சிபுரம், வேலூர், கடலூர், கிருஷ்ணகிரி, சேலம், மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில், 674 கோடியே 96 லட்சம் ரூபாய் செலவில் பெருவாரியாக குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவு மக்களுக்காக 2,800 குடியிருப்பு அலகுகள் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்படும்.
தொலைநோக்குத் திட்டம் 2023-ன் குடிசை பகுதிகள் அற்ற நகர திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் நடப்பு நிதியாண்டில் மாநில அரசின் நிதி உதவியுடன் மைய அரசின் 'அனைவருக்கும் வீட்டு வசதி' திட்டத்தின் கீழ், வழங்கப்படும் மானியத்தோடு பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கான 12,500 குடியிருப்புகளை தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் கட்டும்.
இத்திட்டத்தின் உத்தேச மதிப்பீடு 457 கோடியே 50 லட்சம் ரூபாயாகும்.
மதுரை நகருக்கு அருகில் தேசிய நெடுஞ்சாலை எண்.7க்கு அருகே தோப்பூர்-உச்சப்பட்டி பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் ஓர் துணை நகரம் அமைக்கப்படும் என அரசால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அத்துணை நகரம் அமைக்கும் பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.
இத்திட்டத்தில் மேம்படுத்தப்படும் பகுதிகளில் 10 சதவீதத்தை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் 4,500 பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கான அலகுகளாக தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்திடம் ஒப்படைக்கும்.
இவ்வாறு நன்கு மேம்படுத்தப்பட்ட அலகுகளை, தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரியம், ‚அனைவருக்கும் வீட்டு வசதி‛ திட்டத்தின் கீழ், நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட மதுரை நகரத்தின் ஆட்சேபகரமான புறம்போக்குகளில் வசிக்கும் குடிசைப் பகுதியினருக்கு ஒதுக்கீடு செய்யும்.
அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் மைய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு மானியத்தை பயன்படுத்தி பயனாளிகள் தாமே வீடுகள் கட்டிக் கொள்வதற்கு தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் உதவி செய்யும்.
இதன் மூலம், மதுரை நகரத்தை குடிசைப் பகுதிகள் அற்ற நகரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தமிழ்நாட்டில் அனைத்து இல்லங்களிலும் இணைய வசதி: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
» பதவியேற்கும் முன்பே மக்களுக்கு போக்குவரத்து நெரிசலை பரிசாக அளித்த ஜெயலலிதா: குஷ்பூ அதிரடி
» மீரியபெத்த மக்களுக்கு தனி வீடுகள்: பணிகள் மார்ச்சில் ஆரம்பம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum