Top posting users this month
No user |
Similar topics
லஞ்சம் கொடுத்து சோதித்த கெஜ்ரிவால் மகள்: வாங்க மறுத்து தப்பிய அதிகாரி
Page 1 of 1

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள், அதிகாரி ஒருவரை லஞ்சம் கொடுத்து சோதித்த சுவாரஸ்யமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
டெல்லியின் புறநகர் பகுதியான புராரி அருகே ஆட்டோ ரிக்ஷா டிரைவர்கள் மத்தியில் பேசிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ‘ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி அமைந்த பின்னும் லஞ்சம் முற்றிலுமாக ஒழிந்து விட்டதாக நான் நினைக்கவில்லை.
இருப்பினும் அரசு துறைகளில் 70 முதல் 80 சதவீதம் வரை லஞ்சம் குறைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இதற்கு எடுத்துக்காட்டாக தனது மகள் குறித்த சம்பவத்தை அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், சமீபத்தில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக எனது மகள் ஹர்சிதா ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்குச் சென்றுள்ளார்.
தன்னை முதல்வரின் மகள் எனக் காட்டிக் கொள்ளாமல், மற்றவர்களைப் போலவே வரிசையில் காத்திருந்தார்.
பின்னர், விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஒரு ஆவணத்தைக் கொண்டு வரவில்லை என அவர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
ஆவணம் இல்லாமல் ஏதும் செய்ய முடியாது என்று கூறிய அதிகாரியிடம் 'எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என்றும், எனக்கு உடனே உரிமம் வேண்டும்' எனவும் அவர் கூறியுள்ளார்.
முறையான ஆவணம் தந்தால் மட்டுமே உரிமம் வழங்கப்படும் என அதிரடியாக கூறிய அதிகாரிகளிடம் மறைத்து வைத்திருந்த ஆவணத்தை எடுத்து அளித்துள்ளார்.
அதில், தந்தையின் பெயர் என்ற இடத்தில் கெஜ்ரிவால் எனப் பெயர் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், உடனடியாக உரிமம் கிடைக்க ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.
எனது மகளின் கையில் ரகசிய கமெரா ஒளித்து வைத்திருக்கலாம் என்ற அச்சத்திலேயே அந்த அதிகாரி லஞ்சம் வாங்க மறுத்து விட்டார்.
இதன் மூலம் டெல்லியில் உள்ள அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகள் லஞ்சம் வாங்க பயப்படுகின்றனர்.
நேர்மையான அதிகாரிகள் தங்களது கடமைகளை தைரியமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள் எனக் கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» லஞ்சம் வாங்க மறுத்த ரயில்வே பொறியாளர்: மர்ம கும்பலால் அடித்து கொலை
» சினிமாவில் கெஜ்ரிவால்: வெளியான பரபரப்பு தகவல்
» ஆள் கடத்தல்காரர்களுக்கு லஞ்சம் வழங்கிய அவுஸ்திரேலிய அதிகாரிகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum