Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


திருச்சி அய்யப்பன் கோவிலில் 4–வது மஹா கும்பாபிபேஷகம்: மண்டல பூஜை வருகிற 15–ந்தேதி நடக்கிறது

Go down

திருச்சி அய்யப்பன் கோவிலில் 4–வது மஹா கும்பாபிபேஷகம்: மண்டல பூஜை வருகிற 15–ந்தேதி நடக்கிறது  Empty திருச்சி அய்யப்பன் கோவிலில் 4–வது மஹா கும்பாபிபேஷகம்: மண்டல பூஜை வருகிற 15–ந்தேதி நடக்கிறது

Post by oviya Tue Dec 23, 2014 2:29 pm

திருச்சியில் வருகிற 15–ந்தேதி ஸ்ரீ அய்யப்பனுக்கு 4வது கும்பாபிஷேகமும் மற்றும் மண்டல பூஜை விழாவும் நடைபெற உள்ளது.

திருச்சி லாசன்ஸ் சாலையில் ஸ்ரீ அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருகிற 15–ந்தேதி ஸ்ரீ அய்யப்ப சங்கம் சார்பில் ஸ்ரீ அய்யப்பனுக்கு 4–வது கும்பாபிஷேகமும், 30-வது மண்டல பூஜை விழா நிகழ்ச்சிகளும் நடை பெறுகிறது.

வருகிற 15–ந்தேதி நடைபெறும் கும்பாபிஷேக நிகழ்ச்சியை சபரிமலை தந்திரி கண்டரு மஹேஸ்வரர் அவரது குமாரர் கண்டரு, மோகனரு, பேரன் கண்டரு, மஹேஸ்மோகனரு ஆகியோர் நடத்தி தர உள்ளனர்.

வருகிற 11–ந்தேதி (வியாழக்கிழமை) நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. அன்று மாலை 6 மணிக்கு ஆசாரியவரணம், பசுதானம், பஞ்ச புண்யாஹம், அலங்கார பூஜை, பிரசாத சுத்தி பூஜை, கணபதி பூஜை, ஸ்தல சுத்தி, ரஷிமா கலசம் மற்றும் ரஷோக்ன ஹோமம், வாஸ்து ஹோமம், வாஸ்துபலி, வாஸ்து புண்ணியாசனம், அத்தாழ பூஜை, ஹரிவராஸனம், ஆகிய பூஜைகள் நடைபெறுகிறது.

12–ந்தேதி (வெள்ளிக் கிழமை) காலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. காலை 5.15 மணிக்கு மகா கணபதி ஹோமம், உஷ பூஜை, அங்கூர பூஜை, பிம்ப சுத்த பூஜைகள், சதுர்சுத்தி தாரா, பஞ்சவகவ்யம், பஞ்சகம், உச்ச பூஜை ஆகியவை நடைபெறுகிறது. மாலையில் தீபாராதனை, அங்கூர பூஜை, சகஸ்ரவலம்புரி சங்கு சங்கல்ப பூஜை, அத்தாழ பூஜை, ஹரிவராஸனம் ஆகிய பூஜைகள் நடக்கிறது.

13–ந் தேதி (சனிக்கிழமை) காலை5.15 மணிக்கு மகா கணபதி ஹோமம், உஷ பூஜை, அங்கூர பூஜை, பிராயசித்தத் ஹோமம், 1008 வலம்புரிச் சங்காபிஷேகம், உச்ச பூஜை, மாலை தீபராதனை, அங்கூர பூஜை, அத்தாழ பூஜை, ஹரிவராஸனம் ஆகிய பூஜைகள் நடக்கிறது.

14–ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) காலை 5.15 மணிக்கு மகா கணபதி ஹோமம், உஷத் பூஜை, அங்கூர பூஜை, தத்வ ஹோமம், கலச பூஜை, உச்ச பூஜை, மதியம் மகா அன்னதானம், மாலை தீபராதனை, சயன பூஜை, கும்பேஷ கற்கரி பூஜை, ஜீவ கலச பூஜை, அதிவாச ஹோமம், அத்தாழ பூஜை, ஹரிவராஸனம் ஆகிய பூஜைகள் நடக்கிறது.

15–ந் தேதி (திங்கட்கிழமை) காலை 5 மணிக்கு நடை திறத்தல், காலை 5.15 மணிக்கு மகா கணபதி ஹோமம், சயன உஷ பூஜை, அங்கூர பூஜை, கலசா அலங்கார பிரதட்ஷணம், அஷ்டபந்தன வாகன பிரதிஷ்டா, உச்ச பூஜை, மதியம் 12.15 – 1.30 மணி வரை கும்பாபிஷேகம் மாலை கொடியேற்றம், உற்சவம் ஆரம்பம்

16–ந்தேதி (செவ்வாய் கிழமை) முதல் 18 –ந்தேதி (வியாழக்கிழமை வரை) பிரம்மோத்ஸவ பூஜைகள்

19–ந்தேதி (வெள்ளிக் கிழமை) காலை களபாபிஷேகம், உத்சவ பலி பூஜை, இரவு பள்ளி வேட்டை

20–ந்தேதி (சனிக்கிழமை) மாலை ஆராட்டு, கொடியிறக்கம், பிரம்மோத்ஸவ நிறைவு பெறுகிறது.

பகவான் ஸ்ரீ அய்யப்பனுக்கு பிரம்மோத்ஸவ பூஜை வழிபாடுகள் 15–ந்தேதி தொடங்கி 20–ந்தேதி நிறைவு பெறுகிறது. அன்றைய தினம் கொடியேற்றும் நிகழ்ச்சியும் 19–ந்தேதி இரவு பள்ளிவேட்டை நிகழ்ச்சியும் 20–ந்தேதி மாலை காவிரியில் ஆராட்டும். அதன் பின்னர் கொடியிறக்கம் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழா நாட்களில் உபந்நியாச நிகழ்ச்சிகள் அனைத்தும் இரவு 7 மணி முதல் 9 மணி வரை நடைபெறுகிறது.

வருகிற 14–ந்தேதி (ஞாயிற் றுக்கிழமை) மதியம் 13 ஆயிரம் பேருக்கு ரூ.7 லட்சத்து 80 ஆயிரம் செல வில் மகா அன்னதானம் வழங்கப்படுகிறது. இது அல்லாமல் கார்த்திகை முதல் தேதியில் ஏழை குழந்தைகள், ஆதரவற்றோர், முதியோர் இல்லத்தில் உள்ளோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், பார்வையற்றோர் என சுமார் 2 ஆயிரம் பேருக்கு தனியே அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இந்த வருடம் வருகிற 13–ந்தேதி (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு ஸ்ரீ அய்யப்பனுக்கு 1008 வலம்புரி சங்காபிஷேகம் சிறப்பான முறையில் நடத்தப்பட உள்ளது.

மண்டல பூஜை நாட்களான வருகிற 17–ந்தேதி முதல் 27 –ந்தேதி வரை காலையில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தினசரி சராசரி ரூ.10 ஆயிரம் செலவில் பிரசாதம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் தனியாக வீட்டில் அன்னதானம் செய்ய இயலாதவர்கள் இந்த அன்னதானத்தில் பங்கு பெற அழைக்கப்படுகிறார்கள்.

கும்பாபிஷேக விழாவையொட்டி திருப்பணி காரணமாக துவஜஸ்தம்ப பாலாலயம் செய்யப்பட்டு உள்ளது. கும்பாபிஷேக நாள் 15–ந்தேதி வரை சீவேலி, ரதபவனி இருக்காது.

நடை திறந்திருக்கும் சமயத்தில் காலை 5–11 மணி மாலை 5–9.40 வரை மட்டுமே சங்க வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.

பிரம்மோத்ஸவ நாட்களில் பூஜை நேரங்கள் மாறுபடும்.

41 நாட்கள் விரதம் இருப்பவர்களுககு மட்டுமே ஆலய வளாகத்தில் மாலை (ஒன்று மட்டும்) அணிவிக்கப்படும். அனுமதி சீட்டு அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.

மாலை அணிந்து 41 நாட்கள் முறையாக விரதம் கடைப்பிடித்தவர்களுக்கு சங்க வளாகத்தில் இருமுடி கட்ட (காலை நேரம் 6–11) அனுமதிக்கப்படும். மற்ற விபரங்களை அலுவலகத்தில் விசாரித்து முன் அனுமதி பெறுதல் அவசியம் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum