Top posting users this month
No user |
Similar topics
இந்தியா முழுவதும் பொறியியல் கல்லூரிகளில் 50 ஆயிரம் ’போலி’ ஆசிரியர்கள்: அதிர்ச்சி தகவல்
Page 1 of 1
இந்தியா முழுவதும் பொறியியல் கல்லூரிகளில் 50 ஆயிரம் ’போலி’ ஆசிரியர்கள்: அதிர்ச்சி தகவல்
தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 50 ஆயிரம் ’போலி’ ஆசிரியர்கள் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் உள்ள பொறியியல் கல்லூரிகள் சிலவற்றில் பணிபுரியும் ஆசிரியரின் பெயர், இன்னொரு பொறியியல் கல்லூரியின் ஆசிரியர் பணிப் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது.
இதுதொடர்பாக 8 மாநிலங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள தகவல்களில், 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் இதுபோல் ஒரே ஆசிரியர் 2 கல்லூரிகளில் பணிபுரிவது தெரியவந்துள்ளது.
அனைத்து பொறியியல் கல்லூரிகளும், தங்கள் கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்களின் பெயர் பட்டியலை, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஆசிரியர்களை, வேறு கல்லூரியில் பணிபுரிய அனுப்பக் கூடாது.
ஆனால், இந்த விதிமுறைகளை பூர்த்தி செய்வதற்காக ஒரே ஆசிரியரின் பெயர் பல கல்லூரிகளின் பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இதுபோல் 8 மாநிலங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ‘போலி’ ஆசிரியர்கள் இருப்பது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
ராகேஷ் ரெட்டி டபுடு மற்றும் அவரது குழுவினர் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் இணையதளத்தில் இருந்து, ‘பேஃக்கல்டி’ என்ற பொது இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து ஆய்வு செய்துள்ளனர்.
இதுகுறித்து ராகேஷ் ரெட்டி கூறுகையில், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் விதிமுறைகள் பகிரங்கமாக மீறப்பட்டுள்ளன.
கவுன்சில் வெளியிட்ட தகவல்களை வைத்து, ஒரு ஆசிரியரின் பெயர் பல கல்லூரிகளில் இடம்பெறுவதை நம்மை போன்றவர்களாலேயே கண்டுபிடிக்க முடியும்போது, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் அதிகாரிகளுக்கு தெரியாமல் போக வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஏமன் போர் பகுதியில் சிக்கித் தவிக்கும் 30 ஆயிரம் தமிழர்கள்: அதிர்ச்சி தகவல்
» சாலை விபத்துகளில் 75 ஆயிரம் இளைஞர்கள் உயிரிழப்பு: மத்திய போக்குவரத்து அமைச்சகம் அதிர்ச்சி தகவல்
» இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படும் பக்ரீத் பண்டிகை
» சாலை விபத்துகளில் 75 ஆயிரம் இளைஞர்கள் உயிரிழப்பு: மத்திய போக்குவரத்து அமைச்சகம் அதிர்ச்சி தகவல்
» இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படும் பக்ரீத் பண்டிகை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum