Top posting users this month
No user |
Similar topics
வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கையில் சீனாவை முந்திய இந்தியா! அதிர்ச்சி தகவல்
Page 1 of 1

இந்தியாவில் 19 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையில் வாடுவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
இந்தியாவில் போதிய உணவு இன்றி 194.6 மில்லியன் மக்கள் வாடுகின்றனர் என்று ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பின் 'உலகில் உணவு பாதுகாப்பின்மை நிலைமைகள்' அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மக்கள் தொகையில் 15%-க்கும் மேற்பட்ட மக்கள் போதிய உணவின்றி தவித்து வருகின்றனர்.
உலகிலேயே இது அதிகமானது என்பதோடு, சீனாவை விடவும் இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
உயர் பொருளாதார வளர்ச்சி அதிகப்பேர்களுக்கான உணவு நுகர்வாக மாற்றம் அடைவதில்லை, நல்ல, ஆரோக்கியமான உணவு என்பதை இங்கு விட்டுவிட்டால் கூட உணவே கிடைக்காதவர்கள் எண்ணிக்கையே அதிகமாகி வருகிறது.
அதாவது ஒட்டுமொத்த வளர்ச்சியில் ஏழைகள், வறியோர்கள் பயனடைவதில்லை என்பதையே இது வெளிப்படுத்துகிறது என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் 1990-92களை ஒப்பிடும் போது ஊட்டச்சத்து குறைவைக் களைந்ததில் 36% முன்னேற்றம் உள்ளது.
உலகில் மொத்தம் 79 கோடிக்கும் மேற்பட்டோர் உணவுப்பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு உடையோர்களாக கணக்கிடப்பட்டுள்ள நிலையில், ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகள் 62% உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொருட்களின் விலை உயர்வு, உணவு மற்றும் எரிபொருட்களின் அதிகமாகிக் கொண்டிருக்கும் விலைகள், வேலைவாய்ப்பின்மை ஆகியவையும் உணவுப்பாதுகாப்பின்மைக்கு முக்கிய காரணிகள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வறுமைக்கோட்டுக்கு கீழ் 44 கோடி மக்களை கொண்டுள்ள இந்தியா: அதிர்ச்சி தகவல்
» மனிதக்கழிவை உண்ணும் மனிதர்கள்: அதிர்ச்சி தகவல்
» குவைத்தில் 559 இந்தியர்கள் மரணம்: அதிர்ச்சி தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum