Top posting users this month
No user |
Similar topics
பைக்கை தடுத்துநிறுத்திய போக்குவரத்து காவலர்..வாலிபர் குடல் சரிந்து பலி: சென்னையில் பரபரப்பு
Page 1 of 1

சென்னையில் போக்குவரத்து காவலர் ஒருவர், இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தியபோது வாலிபர் ஒருவர் எதிர்பாரா விதமாக சாலையோர தரப்பு சுவரில் விழுந்து குடல் சரிந்து பலியாகியுள்ளார்.
சென்னை சாலிகிராமத்தில் இன்று நண்பகலில் இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் சென்றபோது, அவர்களை போக்குவரத்து காவலர் ஒருவர் தடுத்து நிறுத்த முயன்றுள்ளார்.
அப்போது அவர்கள் நிற்காமல் சென்றுள்ளனர். இதனால் அவர் லத்தியால் அவர்களை அடித்துள்ளார்.
இதனால் நிலை தடுமாறிய பைக், சாலையோரத்தில் இருந்த தடுப்பு சுவரில் மோதியதில், ஒருவர் தூக்கி வீசப்பட்டு சாலையோர கம்பியில் விழுந்துள்ளார்.
அந்த வாலிபரின் வயிற்றில் கம்பி குத்தியதில் அவரது குடல் சரிந்துள்ளது.
இதையடுத்து அந்த வாலிபர் சரிந்த குடலை பிடித்துக் கொண்டு சுமார் ஒரு மணி நேரம் உயிருக்கு போராடியுள்ளார்.
இந்த விபத்தினை பார்த்த பொதுமக்கள் உடனடியாக 108 அவசர ஊர்திக்கு தகவல் அளித்தும் வாகனம் வராததால் அந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
வாலிபரின் உயிர் பரிதாபமாக போனதால், கடும் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலையோரத்தில் இருந்த காவல்துறை வாகனத்தை அடித்து நொறுக்கியதோடு சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தென் சென்னை கூடுதல் காவல்துறை ஆணையர், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போதிலும், பொதுமக்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டதால் சாலிகிராமத்தில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் கூறுகையில், அவர்கள் தவறு செய்திருந்து ஓடியிருந்தாலும் வாகனத்தின் எண்ணை வைத்து காவலர் வழக்குப் பதிவு செய்திருக்கலாம்.
ஆனால், காவலர் அவர்களை லத்தியால் அடித்தது தவறு என்றும் அந்த காவலர் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
தற்போது சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ், இது தொடர்பாக போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர் நாகராஜன் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தொடர் கனமழையால் பூமியில் இறங்கிய அடுக்குமாடி குடியிருப்பு:சென்னையில் பரபரப்பு
» சாலையில் திடீரென்று தீப்பற்றி எரிந்த ஆட்டோ: சென்னையில் பரபரப்பு (வீடியோ இணைப்பு)
» தெலுங்கு நடிகர் சோபன் பாபுவின் சிலையை அகற்றும் போராட்டம்! சென்னையில் பரபரப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum