Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சாலையில் திடீரென்று தீப்பற்றி எரிந்த ஆட்டோ: சென்னையில் பரபரப்பு (வீடியோ இணைப்பு)

Go down

சாலையில் திடீரென்று தீப்பற்றி எரிந்த ஆட்டோ: சென்னையில் பரபரப்பு (வீடியோ இணைப்பு) Empty சாலையில் திடீரென்று தீப்பற்றி எரிந்த ஆட்டோ: சென்னையில் பரபரப்பு (வீடியோ இணைப்பு)

Post by oviya Mon Apr 27, 2015 3:14 pm

சென்னையில் சாலையில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ஆட்டோ ஒன்று திடீரென்று தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை சைதாப்பேட்டை பகுதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சவாரி சென்று கொண்டிருந்த ஆட்டோ ஒன்றின் பின் பகுதியில் தீப்பற்ற தொடங்கியுள்ளது.

ஆட்டோவில் இருந்து தீ பற்றிய வாடை வருவதை உணர்ந்த ஓட்டுனர் சாலையின் ஓரத்தில் வண்டியை நிறுத்தி பயணிகளை வெளியேற்றியுள்ளார்.

இதனை பார்த்த அந்த பகுதி ஆட்டோ ஓட்டுனர்கள் சிலரும், பொது மக்களும் பொலிசார், தீயணைப்பு துறை மற்றும் அவசர ஊர்திக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் ஆட்டோவில் பற்றிய தீயினை முழுமையாக அணைத்தனர்.

பின்னர் அங்கு வந்த பொலிசார், ஆட்டோ ஓட்டுனரிடம் நடந்தவற்றை கேட்டறிந்தனர்.

அந்த ஓட்டுனர் கூறுகையில், என் பெயர் ஜெயக்குமார். நான் ஏற்கனவே ஒரு சவாரியை முடித்துவிட்டு, மீண்டும் பெண் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தேன்.

சைதாப்பேட்டை பகுதியில் சென்றபோது, வண்டியில் இருந்து தீப் பற்றிய வாடையை உணர்ந்தேன். எனவே சாலையில் வண்டியை நிறுத்திவிட்டு பார்த்தபோது வண்டி தீ பற்றியது தெரிந்தது.

இதை தொடர்ந்து நான் பயணிகளை வண்டியை விட்டு வெளியேற்றி, அவர்களை வேறு வண்டியில் ஏற்றி அனுப்பிவிட்டேன்.

அதற்குள் வண்டி முழுவதுமாக எரிய தொடங்கியதால் நான் அதன் அருகே செல்லவில்லை. இந்த விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

தீயை அணைத்த பின்னர், மற்ற ஆட்டோ ஓட்டுனர்கள் அந்த ஆட்டோவை சாலையை விட்டு அப்புறபடுத்தியுள்ளனர்.

மேலும், இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum