Top posting users this month
No user |
Similar topics
12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: தமிழகத்திலும், புதுவையிலும் மாணவிகளே முதலிடம்
Page 1 of 1

தமிழகத்தில் 1192 மதிப்பெண்கள் பெற்று 2 மாணவிகள் முதலிடம் பெற்றுள்ள நிலையில், புதுவையில் ஒரே பள்ளியை சேர்ந்த 2 மாணவிகள் 1187 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளனர்.
தமிழகம், புதுவையில் இன்று வெளியான 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் தமிழகத்தில் 2 மாணவிகள் முதலிடத்தையும், 4 பேர் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
தமிழகம், புதுச்சேரியில் 8 லட்சத்து 86 ஆயிரம் மாணவர்-மாணவியர்கள் எழுதினர்.
கடந்த மார்ச் 5ம் திகதி தொடங்கி 31ம் திகதி வரையில் நடைபெற்ற இந்த தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது.
12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை அரசு தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் சென்னையில் இன்று வெளியிட்டார்.
அப்போது அவர், தமிழகத்தில் 90.6 சதவீதம் பேர் தேர்வு பெற்றுள்ளனர். மாணவிகள் 93.4 சதவீதமும், மாணவர்கள் 87.7 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
மாநில அளவில் திருப்பூரை சேர்ந்த மாணவி பவித்ரா, கோவையை சேர்ந்த மாணவி நிவேதா ஆகியோர் 1200க்கு 1192 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.
விக்னேஸ்வரன், ஈரோடு, பிரவீண் நாமக்கல், சரண்ராம் நாமக்கல் மற்றும் வித்யா வர்ஷினி திருச்சி ஆகிய 4 மாணவர்கள் 1190 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் 2 ம் இடத்தை பிடித்துள்ளனர்.
நாமக்கல் பள்ளியைச் சேர்ந்த மாணவி பாரதி 1189 மதிப்பெண்கள் எடுத்து 3ம் இடம் பிடித்துள்ளார்.
பிறமொழிப் பாடப் பிரிவில் முதலிடம்
பிறமொழிப் பாடப் பிரிவில் வேலம்மாள் பள்ளி மாணவி ஸ்ரீ நிஷா 1194 மதிப்பெண் பெற்று முதல் இடம் பிடித்துள்ளார். இவர் பிரஞ்சு மொழியை பாடமாக எடுத்து படித்தார்.
கோபாலபுரம் டி.ஏ.வி பள்ளி மாணவி மகாலட்சுமி, சமஸ்கிருதப் பாடத்தை முதலாவதாக எடுத்து 1194 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
சமஸ்கிருதப் பாடத்தை முதலாவதாக எடுத்த மதுரை மாணவி பார்வதி 1193 மதிபெண்கள் எடுத்து இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
பாட வாரியாக 200க்கு 200 எடுத்தவர்கள் விவரம்
கணிதப் பாடத்தில் 9,710 மாணவர்கள் சதம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
கணிதத்துக்கு அடுத்தபடியாக கணக்குப் பதிவியல் பாடத்தில் 5,167 மாணவர்கள் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
இதுதவிர இயற்பியல்- 124, வேதியியல்- 1,049, உயிரியல்-387, தாவரவியல்-75 விலங்கியல்-4, கணிதம்-9710, கணினி அறிவியல்-577, வணிகவியல்-819, வணிகக் கணிதம்- 1,036 பேர் 200-க்கு 200 பெற்றுள்ளனர்.
தேர்வு முடிவுகளை காண ஏற்பாடு
மாணவர்கள் தங்களது பதிவு எண், பிறந்த தேதியைப் பதிவு செய்து தேர்வு முடிவுகளை இணையதளங்களில் அறிந்துகொள்ள www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.in. என்ற இணையதள முகவரி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணம் இல்லாமல் முடிவுகளை அறிந்துகொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
மேலும், மாணவர்கள் தங்களது பள்ளிகளிலேயே தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளவும் ஏற்பாடுகளை பள்ளிக்கல்வி துறை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு:
12ம் வகுப்பு தேர்வில் வருவாய் மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் 97.46 சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
அரியலூர் மாவட்டம் 80.92 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது.
சென்னை 91.54 சதவீதத்துடன் 17வது இடத்தைப் பிடித்துள்ளது.
மூன்றாம் இணைப்பு:
புதுச்சேரியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே பள்ளியை சேர்ந்த இந்துஜா, நிகிதா ஆகிய மாணவிகள் 1187 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தேர்வு முடிவுகளை வெளியிட்டார். மொத்த தேர்ச்சி விகிதம் 88.16 சதவீதம், இது கடந்த ஆண்டை விட 1.45 சதவீதமாக குறைந்துள்ளது. சென்ட் பேட்ரி மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் இந்துஜா, நிகிதா ஆகியோர் 1200க்கு 1187 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.
பிட்டிட் செமினார் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர் ஹரிஸ் பாலாஜி 1186 மதிப்பெண்கள் பெற்று 2வது இடத்தை பிடித்துள்ளார்.
சென்ட் பேட்ரிக் பள்ளியை சேர்ந்த மாணவி பிரதிக் ஷா 1182 மதிப்பெண்கள் பெற்று 3வது இடத்தை பிடித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 97.32 சதவீத மாணவ மாணவியர் தேர்ச்சி
» 12ம் வகுப்பு தேர்வில் கண் பார்வையற்ற மாணவர் படைத்த சாதனை
» கணித தேர்வுக்கு பயந்த 12ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum