Top posting users this month
No user |
Similar topics
மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க வலியுறுத்தினோம்: டெல்லியில் விஜயகாந்த் பேட்டி
Page 1 of 1

மேகதாதுவில் கர்நாடகா புதிய அணை கட்டுவதை தடுக்க வேண்டும் என்று தமிழக அனைத்துக் கட்சிக் குழு பிரதமரிடம் வலியுறுத்தியதாக டெல்லியில் விஜயகாந்த் பேட்டி அளித்துள்ளார்.
மேகதாது அணை தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களுடன் பிரதமரை நேரில் சந்திக்க டெல்லி புறப்பட்டு செல்லும் முன்பு, விஜயகாந்த் விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.
இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் விஜயகாந்துடன் தமிழிசை சவுந்திரராஜன், கனிமொழி உள்ளிட்ட 10 கட்சி தலைவர்கள் டெல்லி சென்றுள்ளனர்.
விஜயகாந்த் அப்போது பேசுகையில், இது அரசியல் பிரச்சனை அல்ல, மக்கள் பிரச்சினை.
இதற்காக அனைத்து கட்சி தலைவர்களையும் ஒரே நாளில் சந்தித்து அழைத்ததும், அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர். இதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரதமரிடம் மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பதை நேரில் வலியுறுத்துவோம் என்றும் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் நேற்று ஒரே நாளில் திமுக தலைவர் கருணாநிதி, தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோரை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு:
டெல்லியில் மேகதாது அணை விவகாரம் உட்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க தேமுதிக தலைவர் விஜயகாந்த் முயற்சியில் தமிழக அனைத்து கட்சிக் குழு இன்று டெல்லி சென்றனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, த.மா.காவின் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட தமிழக அனைத்துக் கட்சிக் குழுவினர் இன்று பிரதமரை சந்தித்து பேசியுள்ளனர்.
இந்த சந்திப்பின் போது மேகதாது அணை விவகாரம் உட்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், மேகதாது அணை விவகாரம், முல்லைப் பெரியாறு, தமிழக மீனவர் பிரச்சனை, 20 தமிழர்கள் படுகொலை, நிலம் கையகப்படுத்தும் மசோதா குறித்து எங்களது கோரிக்கைகளை முன் வைத்து மனு அளித்துள்ளோம். பிரதமர் மோடி அதனை பரிசீலிப்பதாக தெரிவித்தார்.
ஆந்திர பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியான 20 பேர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 25 லட்சம் ஆந்திர அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றோம்.
மேலும், பிரதமருடனான சந்திப்பு திருப்திகரமாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மேகதாதுவில் கர்நாடகா புதிய அணை கட்டுவதை தடுக்க வேண்டும் என்று தமிழக அனைத்துக் கட்சிக் குழு பிரதமரிடம் வலியுறுத்தியதாக டெல்லியில் விஜயகாந்த் பேட்டி அளித்துள்ளார். மேகதாது அணை தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களுடன் பிரதமரை நேரில் சந்திக்க டெல்லி புறப்பட்டு செல
» டெல்லியில் பொறுப்பேற்ற முதல் பெண் ஓட்டுனர்
» டெல்லியில் அப்துல் கலாம் உடலுக்கு தலைவர்கள் நேரில் அஞ்சலி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum