Top posting users this month
No user |
டெல்லியில் அப்துல் கலாம் உடலுக்கு தலைவர்கள் நேரில் அஞ்சலி
Page 1 of 1

டெல்லியில் உள்ள கலாமின் இல்லமான ராஜாஜி மார்கில் வைக்கப்பட்டுள்ள அப்துல் கலாமின் உடலுக்கு தலைவர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மூன்றாம் இணைப்பு:
ராஜாஜி மார்கில் வைக்கப்பட்டுள்ள அப்துல் கலாமின் உடலுக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவும், துணைத் தலைவர் ராகுலும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
ராஜாஜிமார்க் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அப்துல் கலாம் அவர்களின் உடலுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி, தமிழக ஆளுநர் ரோசையா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவரது மனைவியுடன் வந்து கலாமின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
பாஜக தலைவர் அமித் ஷா, சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், மத்திய இணை அமைச்சர் ஜிதேந்தர் சிங், ரவி ஷங்கர் பிரசாத் உள்ளிட்டோரும் கலாமின் உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினர்.
பிரதமர் நரேந்திர மோடி அப்துல் கலாமின் இல்லத்தில் உள்ள இரங்கல் புத்தகத்தில், தன்னுடைய இரங்கலைப் பதிவு செய்தார்.
கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முன்னாள் பிரதமர் தேவகவுடா, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், கோவா ஆளுநர் மிரிதிலா சின்ஹா, இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி டி.ராஜா, மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இரண்டாம் இணைப்பு:
கவுகாத்தியில் இருந்து ராணுவ விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டு வரப்பட்ட அப்துல் கலாமின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
ஐஏஎப் விமானத்தில் கொண்டு வரப்பட்ட முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடல் டெல்லியில் உள்ள பாலம் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அவரது உடலை பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், முப்படைத் தளபதிகள் பெற்றுக் கொண்டனர்.
பிற்பகல் 3 மணிக்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக கலாம் உடல் வைக்கப்பட உள்ளது.
அப்துல் கலாமின் உறவினர்களும் டெல்லி விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர்.
முதலாம் இணைப்பு:
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக இன்று மதியம் டெல்லிக்கு கொண்டு வரப்படுகிறது.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், ஷில்லாங்கில் நேற்று இரவு மாரடைப்பால் காலமானார்.
இந்நிலையில், ஷில்லாங் பெத்தானியா மருத்துவமனையில் இருந்து அவரது உடல் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு இன்று கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் அமித் மகாஜன் தெரிவித்துள்ளார்.
ஷில்லாங்கில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக்கு கலாமின் உடல் ஹெலிகாப்டர் மூலமாக எடுத்து வரப்பட்டுள்ளது.
அங்கிருந்து டெல்லிக்கு சிறப்பு விமானம் மூலமாக கொண்டு செல்லப்படும் கலாமின் உடலை, டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் மோடி பெற்றுக்கொள்கிறார்.
இன்று மதியம் 3 மணி முதல் பொதுமக்கள் அப்துல்கலாமின் உடலுக்கு அஞ்சலி செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகள் அனைத்தும் அப்துல்கலாமின் சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ''நான் இறந்து போய் விட்டால், அன்றைய தினம் விடுமுறை விட்டு விடக் கூடாது. என் மீது உண்மையான அன்பு கொண்டவர்களாக இருந்தால்,கூடுதலாக ஒருநாள் வேலை பார்க்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டவர் அப்துல்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum