Top posting users this month
No user |
Similar topics
டெல்லியில் பொறுப்பேற்ற முதல் பெண் ஓட்டுனர்
Page 1 of 1

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் பெருகிவரும் டெல்லியில் பெண் ஒருவர் முதல் பேருந்து ஓட்டுனராக பொறுப்பேற்றுள்ளார்.
டெல்லி போக்குவரத்து கழகம் (Delhi Transport Corporation) சரிதா என்ற பெண்மணியை முதல் பெண் ஓட்டுனராக நியமித்துள்ளது.
டெல்லி போக்குவரத்து துறை அமைச்சர் கோபால் ராய் இதுபற்றி கூறுகையில், டெல்லி போக்குவரத்து கழகம் இன்று, முதல் பெண் ஓட்டுனரை பணியில் அமர்த்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சரிதாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு இதுபோல் மேலும் பல பெண்கள் ஓட்டுனர்களாக முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.
டெல்லி போக்குவரத்து கழகத்தில் 243 பெண் நடத்துனர்கள் இருந்தாலும், சரிதா தான் முதல் பெண் ஓட்டுனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நலகொண்டா மாவட்டத்தை சேர்ந்த சரிதா இதற்கு முன்னர் டெல்லியில் டாக்சி ஓட்டுனராக வேலை செய்து வந்தார்.
சரிதா இதுபற்றி கூறுகையில்,எங்கள் குடும்பத்தில் நாங்கள் மொத்தம் 5 பெண்கள், அவர்களில் நான் தான் இளையவள் என் 4 அக்காக்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது.
என் தந்தையின் உடல் நிலை சரியில்லாத்தாலும், பொருளாதார சிக்கல்களாலும் நான் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டோ ஓட்ட தொடங்கினேன். பின்னர் 4 சக்கர வாகனங்களும் பேருந்துகளையும் இயக்க தொடங்கினேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், என் பேருந்தில் பயணிக்கப்போகும் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பான பயணத்தை அளிப்பேன். சாலை விதிகளை மதித்து செயல்படுவேன் என்று தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ராணுவ ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல் பெண் இயக்குநராக மஞ்சுளா நியமனம்
» உயிருக்கு போராடிய ஓட்டுனர்: குடம் குடமாய் பாமாயில் பிடித்து சென்ற பொதுமக்கள்
» ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓட்டுனர் இல்லாத காரில் பயணித்த மோடி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum