Top posting users this month
No user |
Similar topics
இஸ்ரேலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ராணுவ வீரருக்கு வீரதீர விருது
Page 1 of 1

இஸ்ரேலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம் ராணுவ வீரர் ஒருவருக்கு அதிபரின் வீரதீர விருது வழங்கி கௌரவ படுத்தியுள்ளனர்.
இஸ்ரேலில் சிறப்பாக பணியாற்றிய ராணுவ வீரர்களுக்கு ஆண்டுதோறும் அதிபரின் பெயரால் வீரதீர சேவைக்கான சிறப்பு விருது வழங்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டிற்கான விருதுக்கு 120 ராணுவ வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அடியேல் யூசுப் (22) என்பவரும் ஒருவர்.
'எலைட்' எனப்படும் அதிரடிப்படை வீரர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்ட இவர், கடந்த ஆண்டு காஸா போரின்போது கடத்தப்பட்ட 3 இஸ்ரேலிய வாலிபர்களை தேடி கண்டுபிடிக்கும் சிறப்புப் படையில் இணைந்து பணியாற்றியுள்ளார்.
அவருக்கு இஸ்ரேல் அதிபர் ரெவென் ரிவ்லின் நேற்று விருது வழங்கி கௌரவித்துள்ளார்.
யூத இனத்தை சேர்ந்த அடியேல் யூசுப் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்ரேல் ராணுவத்தில் சேருவதற்காக மும்பையில் இருந்து குடிபெயர்ந்து ஜெருசலேம் நகருக்கு சென்றுள்ளார்.
அங்கு எபிரேய மொழிப் பயிற்சி மற்றும் ராணுவ பயிற்சியை முடித்த அவர், 153 கிலோ எடை கொண்டவராக இருந்ததால் அவருக்கு ஒரு சோதனைச் சாவடியில் கண்காணிப்பு பணி வழங்கப்பட்டுள்ளது.
போர்ப்படை பிரிவில் இடம்பெற்று எதிரிகளுடன் சண்டையிட்டு சாகசத்தை வெளிப்படுத்த முடியவில்லையே என்று ஆதங்கப்பட்ட அவர், கடுமையான உடற்பயிற்சிகள் மூலம் 40 கிலோ எடையை குறைத்து பின்னர் போர் படையில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் அதிபர் ரெவென் ரிவ்லின் விருதுகளை வழங்கிவிட்டு பேசுகையில், இஸ்ரேல் ராணுவம் சிறப்புமிக்க, வலிமை வாய்ந்த ராணுவம் என்பதை நிரூபிப்பதற்கான சான்றாக நீங்கள் இருக்கின்றீர்கள். இந்த விருது உங்களது வீரத்துக்கும், ஆற்றலுக்கும் அளிக்கப்பட்டது.
மேலும், தலைமைப்பண்பு, நட்புணர்வு, ஏற்றுக்கொண்ட பணியினை கடும் சிரமங்களுக்கு இடையிலும் சாதித்த துணிவு ஆகியவற்றுக்காக வழங்கப்பட்ட விருது என பாராட்டியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இஸ்ரேலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ராணுவ வீரருக்கு வீரதீர விருது
» ஒடிசாவை சேர்ந்த சிறுமிக்கு கூகுள் அறிவியல் கண்காட்சியில் விருது
» இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஓவியர் மோடிக்கு அளித்த பரிசு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum