Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஜெயலலிதா வழக்கில் பவானிசிங் ஆஜரானது தவறுதான்..ஆனால் விரைவில் தீர்ப்பு! உச்சநீதிமன்றம் அதிரடி

Go down

ஜெயலலிதா வழக்கில் பவானிசிங் ஆஜரானது தவறுதான்..ஆனால் விரைவில் தீர்ப்பு! உச்சநீதிமன்றம் அதிரடி Empty ஜெயலலிதா வழக்கில் பவானிசிங் ஆஜரானது தவறுதான்..ஆனால் விரைவில் தீர்ப்பு! உச்சநீதிமன்றம் அதிரடி

Post by oviya Wed Apr 22, 2015 3:04 pm

ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜரானது தவறுதான் என்று உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் பெஞ்ச் கருத்து தெரிவித்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அரசு வழக்கறிஞர் பவானி சிங் செயல்படுகிறார் என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது.

நீதிபதி மதன் பி. லோகுர், ‘பவானிசிங் நியமனம் செல்லாது’ என்றும் நீதிபதி பானுமதி ‘செல்லும்’ என்றும் தீர்ப்பளித்தனர்.

எனவே இந்த மனு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே.அகர்வால், பிரபுல்ல சி. பாண்ட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில் இன்று நடந்த விசாரணையில், நீதிபதிகள் கூறுகையில், ஜெயலலிதா சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஆஜராகும் அரசு வழக்கறிஞர் பவானி சிங்கின் நியமனத்தில் சில முறைகேடுகள் நடந்திருப்பதாக தெரிகிறது.

ஆனாலும், இந்த வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மீண்டும் புதிதாக விசாரணை நடத்த அனுமதிக்க மாட்டோம்.

பவானி சிங் நியமனத்தை எதிர்க்கும் மனுதாரர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் எழுத்துபூர்வமான வாதத்தை தாக்கல் செய்ய நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் தற்போது இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்ததால் வரும் 27ம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum