Top posting users this month
No user |
Similar topics
தெலுங்கானாவில் களைகட்டும் பேபி பஜார்..சில ஆயிரங்களில் விற்கப்படும் பெண் குழந்தைகள்!
Page 1 of 1

தெலுங்கானாவில் உள்ள நல்கொண்டா மாவட்டத்தில் புதிதாக பிறந்த பெண் குழந்தைகள் சில ஆயிரம் ரூபாய் விலையில் விற்கப்படும் அவலம் நடப்பது தெரியவந்துள்ளது.
தலைநகர் ஹைதராபாத்தில் இருந்து 120 கி.மீ தூரத்தில் உள்ள நல்கொண்டாவில் இந்த பெண் குழந்தை விற்பனை வெகு சுலபமாக நடக்கிறது.
நல்கொண்டாவில் உள்ள தேவாரகொண்டாவிற்கு சென்றால் அங்குள்ள ஆட்டோ ஓட்டுனர்களே அரசு நடத்தும் குழந்தைகள் மையத்திற்கு அழைத்து சென்றுவிடுகின்றனர்.
அந்த மையத்தில் சுமார் 8 முதல் 10 பெண் குழந்தைகளை விற்பனைக்கு தயாராக வைத்துள்ளனர்.
இதற்கென தனியாக செயல்படும் இடைத் தரகர்கள் குழந்தை வாங்க வருபவர்களிடம் குழந்தைகளை காண்பிக்கின்றனர்.
மேலும், ஆண் குழந்தைகள் அங்கு விற்பனை செய்யப்படுவதில்லை என்று இடைத் தரகர்கள் தெரிவிக்கின்றனர்.
அங்கு குழந்தை ஒன்றை தெரிவு செய்த பின்னர், இடைத் தரகர்கள் மையத்தின் தலைவரிடம் பேசிவிட்டு அன்று மாலைக்குள் குழந்தையை பெற்று தந்துவிடுகின்றனர்.
இந்த பெண்கள் குழந்தைகள் அனைத்தும், ஆண் குழந்தையின் மீது மோகம் கொண்ட குடும்பங்களால் ஒப்படைக்கப்பட்டவை என்பது தெரியவந்துள்ளது.
பழங்குடியின மக்கள் வாழும் இந்த மாவட்டத்தில் பெரிதும் ஏழ்மை தொற்றியுள்ளதால் பெண் குழந்தைகளை தேவையற்றதாக நினைக்கும் பெற்றோர்கள் பணத்திற்காக பெண் குழந்தைகளை விற்கின்றனர்.
ஆனால் அரசு சட்டத்தின்படி குழந்தையை தத்து கொடுப்பவர்கள் அபிடவிட்டில் கையெழுத்திட வேண்டும், அவர்கள் குழந்தை தத்து கொடுப்பதற்கு 90 நாட்களில் தங்களுடைய நிலையை மாற்றிக் கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நல்கொண்டாவில் முறையற்ற முறையில் குழந்தைகள் வழங்கப்படுகிறது. மையத்தில் ஆவணங்கள் முறையாக பராமரிப்பு செய்யப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
இடைத்தரகர் கூறுகையில், ஒரு குழந்தைக்கு மற்றொரு குழந்தையை மாற்றிவிட்டால் யாருக்கு தெரியப்போகிறது? இங்கு இது வாடிக்கையாக நடக்க கூடியதே என்று கூறியுள்ளார்.
மேலும் தெரிவு செய்யப்பட்ட குழந்தையை ஒரு வாரத்தில் தயார் செய்து அனுப்பி விடுவோம். வெறும் 5 ஆயிரத்தில் பெண் குழந்தைகளை வாங்கிவிடலாம் என்று தெரிவித்துள்ளார்.
இந்த வியாபாரத்தில் காம்லி என்ற பெண்மணி பெயர் போனவர் என்று தெரியவந்துள்ளது.
அந்த காம்லி என்ற பெண்மணி, இரண்டு முறை துணை பஞ்சாயத்து தலைவராக இருந்துள்ளார். இதுவரையில் சுமார் 20 குழந்தைகளை விற்றுள்ளது தெரியவந்துள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» குழந்தைகளின் நிலையும், குழந்தைகள் பற்றிய புரிதலும்: இன்று குழந்தைகள் தினம்
» களைகட்டும் ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: வீதி வீதியாக வாக்கு சேகரிக்கும் பன்னீர் செல்வம்
» குழந்தைகள்
» களைகட்டும் ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: வீதி வீதியாக வாக்கு சேகரிக்கும் பன்னீர் செல்வம்
» குழந்தைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum