Top posting users this month
No user |
Similar topics
குழந்தைகளின் நிலையும், குழந்தைகள் பற்றிய புரிதலும்: இன்று குழந்தைகள் தினம்
Page 1 of 1

சிறப்பு தினங்களை எல்லா நாடுகளுமே ஒருங்கிணைந்து கொண்டாடும் நிலையை சர்வதேச சமூகம் ஏற்படுத்தியிருந்தாலும், குழந்தைகள் தினத்தை ஒவ்வொரு நாடும் தான் விரும்பிய நாளில் கொண்டாட அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கான சிந்தனை துவக்கம் 1924ல் ஏற்பட்டிருந்தாலும் 1954ல் முதன் முதலாக குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டுள்ளது.
இந்தியாவில் குழந்தைகள் தினம் நவம்பர் 14 ம் திகதி கொண்டாடப்படுகிறது. இது குழந்தைகள் மீது கொள்ளைப் பிரியம் உள்ள, குழந்தைகளால் ’மாமா நேரு’ என்று பாசமாக அழைக்கப்பட்ட சுதந்திர இந்தியாவின் முதல் பாரத பிரதமரான நேரு அவர்களின் பிறந்தநாள் தான்.
குழந்தைகள் தினம் மட்டுமல்ல, அன்னையர் தினம், ஆசிரியர் தினம் இப்படி எந்த தினம் கொண்டாடுவதும், அவர்கள் அவசியத்தை ஒரு விழுப்புணர்வாக மக்களிடம் வலியுறுத்ததான்.
அந்த ஒரு நாளில் அவர்களை சுற்றி ஒரு ஒளிவட்டமே ஏற்படுத்தப்படுகிறது எனலாம். அது, சமுதாயத்தில் அவர்கள் மதிக்கப்படவும் பாதுகாக்கப்படவுமான ஒரு உந்துதலே.
அன்னையர்களில் ஒரு தியாகம், ஆசிரியர்களில் நல்வழிகாட்டுதல், காதலர் தினம், அது எல்லோர் இதயத்தையுமே தழுவிக் கிடக்கும் ஒரு இனிய தவிப்புக்காக, பீர் தினம் தவறானாலும் பெருகிவரும் போதை விரும்பிகளையும் பொருட்படுத்துவதற்காக, இப்படி ஒவ்வொரு தினம் ஏற்பட்டதிலும் வெவ்வேறு வித நோக்கம் இருக்கிறது.
குழந்தைகள் தின அவசியமாதல்:
குழந்தைகள் தினம் ஏற்பட குறிக்கோள் கொஞ்சமல்ல, ஒரு நாட்டின் எதிர்காலம் சிறந்த மனித ஆற்றலால் சீர்தூக்கி எழுப்பப்பட வேண்டுமானால், நாம் நம்ப வேண்டியது அப்போது பொறுப்பில் இருக்கும் பெரியவர்களையோ அடுத்து வகிக்கப்போகும் இளைஞர்களையோ அல்ல, குழந்தைகளைதான்.
பாண்டம் ஆக்கப்படாத பச்சைமண் குழந்தைகள்தான். எந்த வித தத்துவத்தை விதைத்தும் நாம் விரும்புகிற வழிக்கு வளைத்துக்கொள்ள வருபவர்கள். பெற்றோரும் இந்த சமுதாயமும் புரிதலின் விளக்காகவும் போய் சேரும் இலக்காகவும் குழந்தைகளின் எதிரில் தெரிகிறது.
குழந்தைகளிடம் ஒரு சமுதாயம் நேர்முறையான தாக்கத்தையும் சமயங்களில் எதிர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்திவிடுவதால் குழந்தை வளர்ச்சியில் தீர்மானிக்க முடியாத தடுமாற்றமும் உள்ளது.
ஒரே சூழலில் வளரும் இருவர் இருவேறு துருவங்களாக குணங்களில் மாறுவதும் உண்டு. அதனால், கிரகிப்பிலும் ஒரு தனித்துவம் ஒவ்வொருவருக்கும் இருப்பதை உணர முடிகிறது.
குழந்தைகளின் நிலை:
சூழ்நிலை கைதியாகவும் சுகவாசியாகவும் இருப்பதை பெரும்பாலானவர்களால் கட்டுப்படுத்திக்கொள்ள முடிவதில்லை. அதனால், குழந்தைகள் என்பதையும் மறந்து பெற்றோர்களிலும் ஆசிரியர்களிலும் கூட கடுமையாக நடந்துகொள்வதை அதிகமாகவே இப்போது ஊடகங்களில் காணமுடிகிறது.
செல்போன், கணினி, கடுமையான அடக்குமுறை கல்விசுமை, மன அழுத்தத்திற்கு மாற்றாக மது பழக்கம், உலக ஆபாசத்தையே உள்ளங்கையில் செல்போன் வடிவில் கொடுத்துவிட்டு, 9 ம் வகுப்பு மணவர்களிலே 50 சதவீதத்துக்கு மேல் போர்னோகிராபி பார்க்கிறார்கள் என்று கணக்கெடுத்தும் கவலைப்படுகிறோம்.
குழந்தைகள் நம்மை புரிந்து நடந்துகொண்டால் தேவலையே என்ற மனநிலையில் உள்ள நாம், குழந்தைகளை புரிந்து நடந்துகொள்வதில்லை. இந்த நியாயமில்லாத முரண் நடைமுறையில் எல்லோரிடமும் எல்லாநிலையிலும் உள்ளது.
குழந்தைகள் உண்மையானவர்கள், ஆரோக்கிய சீலர்கள், அவர்களை நல்வழிப்படுத்துவது எதிர்காலத்துக்கு சிறப்பு. அப்படி நடத்தினால் பெரியவர்களுக்கு நிகழ்காலமே சிறப்புதான்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அன்றும் காதலர் தினம்…இன்றும் காதலர் தினம்: முதல்வராக பதவியேற்கிறார் கெஜ்ரிவால்
» அன்புள்ளம் கொண்ட அணு விஞ்ஞானி அப்துல் கலாம்: இன்று மாணவர்களின் எழுச்சி தினம்
» தினம் தினம் வந்த ஆபாச எஸ்.எம்.எஸ்கள்: இளம்பெண்ணின் உயிரை பறித்த சோகம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum