Top posting users this month
No user |
Similar topics
அன்புள்ளம் கொண்ட அணு விஞ்ஞானி அப்துல் கலாம்: இன்று மாணவர்களின் எழுச்சி தினம்
Page 1 of 1

அணுவிஞ்ஞானி, முன்னாள் ஜனாதிபதி, பாரத ரத்னா அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15ம் திகதியை மாணவர்களின் எழுச்சி தினமாக எல்லா பள்ளி, கல்லூரிகளும் கொண்டாட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு இதற்கான அரசு உத்தரவை எல்லா கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ளது. அதன் காரணமாக, அக்டோபர் 15ம் திகதியான இன்று மாபெரும் மாணவர்களின் எழுச்சிப்பேரணியும் நடைபெற இருக்கிறது.
மேலும், மாணவர்களுக்கு கலாம் பற்றிய கட்டுரைப் போட்டிகளும், பேச்சுப் போட்டிகளும் நடத்துமாறும் அவரை பற்றிய எழுச்சி சொற்பொழிவுகள் நிகழ்த்துமாறும் அரசு கல்வி நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
அரசின் இந்த உத்தரவை அரசு கல்வி நிறுவனங்கள் மட்டும் அல்லாமல், அரசு உதவிபெறும் கல்லூரிகள், தனியார் பள்ளிகள் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகளும், ஏற்று சிறப்பாக செய்ய இருக்கின்றன.
கடந்த யூலை 27ம் திகதி அப்துல் கலாம் மொத்த இந்தியாவையும் சோக இருளில் மூழ்கடித்துவிட்டு, தனது வாழ்க்கை பயணத்தை முடித்துக்கொண்டு சென்றார்.
அப்துல் கலாம் ராமேஸ்வரத்தில் ஒரு சிறிய கிராமத்தில், 1931ம் ஆண்டு அக்டோபர் 15ம் திகதி பிறந்தார்.
மீன்பிடி படகுகளை பழுது பார்க்கும் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, தனது திறமையாலும் கடின உழைப்பாலும் அணு விஞ்ஞானியாகவும் இந்தியாவின் முதல் குடிமகன் என்று சொல்லும் குடியரசு தலைவர் பதவியையும் வகித்து சாதனையின் உச்சத்தை தொட்டவர்.
இந்தியாவின் 11 வது ஜனாதிபதியாக (2002 - 2007) பதவி வகித்தார். இவர் ராதாகிருஷ்ணன், வெங்கட்ராமனை அடுத்து மூன்றாவதாக ஜனாதிபதியான தமிழர் ஆவார்.
முந்தைய இருவரைவிடவும் கலாம் பதவி வகித்தபோதுதான், குடியரசு தலைவர் மாளிகையில் தமிழகத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
மேலும் இவருக்கு முந்தைய மற்றும் பிந்தைய ஜனாதிபதிகளுக்கெல்லாம் கிடைக்காத மக்கள் ஜனாதிபதி என்ற பட்டம் கலாமுக்கே கிடைத்தது.
எளிமையாக வாழ்வது ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடு என்றும் வாழ்வியல் ஞானம் இல்லாதவர்களுக்கு அது மிகவும் கடினமானது என்றும் வில்லியம் ஹாஸ்ட்லி, ஐன்ஸ்டீன் போன்ற அறிஞர்கள் எளிமையின் வலிமையை சிறப்பாக கூறியுள்ளனர். அது கலாமின் எளிய வாழ்வுக்கு பொருத்தமாகவே அமைந்தது.
இந்தியா பொக்ரைன் அணுகுண்டு சோதனை நடத்தி உலகிற்கு தன்னை ஒரு வல்லரசாக காட்டியதில் அப்துல் கலாமுக்கு பெரும் பங்கு உண்டு.
அக்னி, பிரித்வி போன்ற ஏவுகணை தயாரிப்பிலும் அவருடைய பங்களிப்பு போற்றுவதுக்குரியது ஆனதால், அவர் ஏவுகணை நாயகன் என்றே அழைக்கப்பட்டார்.
இப்படி ஒரு எளிமையான மனிதரை, இளைஞர்கள் ரோல் மாடலாக ஏற்றுக்கொண்டிருப்பது எந்த ஜனாதிபதிக்கும் அரசியல்வாதிகளுக்கும் விஞ்ஞானிகளுக்கும் கிடைக்காத பெருமை.
அதுக்கு காரணம் அவருடைய திறமை, உழைப்பையும் தாண்டி அவர் அமைத்துக்கொண்ட வாழ்க்கைமுறையும், தனிமனித ஒழுக்கமும் ஆகும்.
கலாம் மாணவர்களையும் குழந்தைகளையும் கனவு காணச்சொன்னார். இந்தியாவை வல்லரசாக்கவும் வருங்கால சமுதாயம் வளமடையவும் இப்போதுள்ள அரசியல் சூழல்கள் சரியான போக்கு அல்ல, என்று உணர்ந்த காரணத்தால் தனது அழுத்தமான ஏக்கத்தை, எதிர்மறையாக மாணவர்களிடம் பதிவு செய்திருப்பதாகும்.
தனது ஜனாதிபதி பதவி காலம் முடிந்த பின்னரும் கல்விப் பணியையும் மாணவர்களை ஊக்குவிக்கும் கருத்தரங்குகளையும் இந்தியா முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் இந்தியாவை 2020க்குள் வல்லரசாக்கும் தொண்டாகவே செய்துவந்தார்.
ஒரு அறிவு ஜீவியாய், அணுவிஞ்ஞானியாய் இருந்தவருக்கு படிக்காத பாமரனும் வேற்றுமொழிக்காரர்களும் கூட அவருடைய படத்தை வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தியது, வழக்கத்திற்கு புதிதானது.
அப்துல் கலாம் பிறந்த தினத்தை அனைத்து இந்தியர்களும் கொண்டாடுவதன் மூலம் ஒரு நல்ல மனிதர் எந்த மதத்தில் பிறந்திருந்தாலும் காழ்ப்புணர்ச்சி காரணமாக கைவிடமாட்டார்கள், என்ற எண்ணம் சிறுபான்மை இன மக்களிடமும் விதைக்கப்படுகிறது. அது இந்தியாவின் ஒற்றுமையையும் இறையாண்மையையும் வலுப்படுத்துகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அப்துல் கலாம் பிறந்த தினம் இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்படும்: ஜெயலலிதா
» விஞ்ஞானிகளின் வாழ்வினிலே.... பாரத ரத்னா டாக்டர் அப்துல் கலாம்
» அப்துல் கலாம் பற்றிய குறிப்புக்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum