Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


19ஆம் திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது உறுதி: ஜனாதிபதி - 27ம், 28ம் திகதிகளில் விவாதம்

Go down

19ஆம் திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது உறுதி: ஜனாதிபதி - 27ம், 28ம் திகதிகளில் விவாதம் Empty 19ஆம் திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது உறுதி: ஜனாதிபதி - 27ம், 28ம் திகதிகளில் விவாதம்

Post by oviya Tue Apr 21, 2015 1:21 pm

19ஆம் திருத்த சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று ஜனாதிபதி மற்றும் கட்சி தலைவர்களுக்கிடையே கலந்துரையாடல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் 19ஆம் திருத்த சட்டம் சமர்ப்பிப்பது தொடர்பாக நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் தற்போது காணப்படுகின்ற அமளி துமளிகள் அனைத்தும் அரசியல் சூழச்சியெனவும் 19ஆம் திருத்தசட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதனை தடுப்பதற்காக இத்தகைய சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் மக்கள் விடுதலை முன்னணி நேற்று ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளது.

யார் எவ்வாறான சூழ்ச்சிகள் மேற்கொண்டாலும் 19 ஆம் திருத்த சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது உறுதி என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

19ம் திருத்தச் சட்டம் குறித்த விவாதம் 27ம், 28ம் திகதிகளில்

19ம் திருத்தச் சட்டம் குறித்த விவாதம் எதிர்வரும் 27ம் மற்றும் 28ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

சற்று நேரத்திற்கு முன்னதாக சபாநாயகர் சமால் ராஜபக்ஸ இதனை நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.

அது வரையில் நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 19ம் திருத்தச் சட்டம் குறித்த விவாதத்தின் பின்னர் 28ம் திகதி வாக்கெடுப்புக்கு விடப்பட உள்ளது.

இன்று காலை 15 நிமிடங்களுக்கு முதலில் நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது. அதன் பின்னர் கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று அவசரமாக நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 12.35 மீண்டும் நாடாளுமன்றம் கூடிய போது எதிர்வரும் 27ம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்படும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum