Top posting users this month
No user |
Similar topics
ரயிலில் தலைவைத்து வருவாய் அதிகாரி தற்கொலை
Page 1 of 1

கோயம்புத்தூரில் வருவாய் அதிகாரி ஒருவர் தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ரேஸ்கோர்சில் டி.எப்.ஓ காம்பவுண்டில் உள்ள அரசு ஊழியர் குடியிருப்பில் வசித்து வந்த தட்சிணாமூர்த்தி என்பவர் கோவை அருகே கிணத்துக்கடவில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் வருவாய் அதிகாரியாக வேலைபார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் அவர் வழக்கம் போல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு எழுந்து நடைபயிற்சிக்கு செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு வீட்டில் இருந்து கிளம்பியுள்ளார்.
ஆனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த அவர், கோவை ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு 6வது பிளாட்பாரத்தில் கோவையில் இருந்து மயிலாடுதுறைக்கு செல்லும் ஜனசதாப்தி ரயில் நின்று கொண்டிருந்தது. அதில் பயணிகள் ஏறி அமர்ந்தனர்.
பின்னர் பயணிகளை ஏற்றிக்கொண்டு 7.10 மணிக்கு ஜனசதாப்தி ரயில் தனது பயணத்தை தொடங்கிய போது தட்சிணாமூர்த்தி தண்டவாளத்தில் தலைவைத்து படுத்துள்ளார்.
இதையடுத்து கண் இமைக்கும் நேரத்திற்குள் ரயில் அவரது கழுத்தில் ஏறி இறங்கியதால் தட்சிணாமூர்த்தி தலை துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார்.
இந்த தகவல் அறிந்ததும் கோவை ரயில்வே பொலிசார், சம்பவ இடத்துக்கு விரைந்து தட்சிணாமூர்த்தியின் உடலைக் கைப்பற்றியுள்ளனர்.
கணவர் தற்கொலை பற்றி அறிந்த அவரது மனைவி கவிதாவும், உறவினர்களும் மருத்துவமனைக்கு சென்று தட்சிணாமூர்த்தியின் உடலைப் பார்த்து கதறி துடித்துள்ளனர். இவர்களுக்கு குருபிரசாத், தனயந்த் என்ற 2 மகன்கள் உள்ளனர்.
தட்சிணாமூர்த்தி ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள தனது தங்கை கணவர் கண்ணனுடன் சேர்ந்து ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஆனால் இந்த வர்த்தகம் அவர்களுக்கு பெருமளவில் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் மனமுடைந்த அவர், தனது மனைவியிடம், ஆன்லைன் வர்த்தகம் நம்மை இப்படி அதலபாதாளத்தில் தள்ளி விட்டதே என்று கூறியுள்ளார்.
அதற்கு நஷ்டத்தை சமாளித்துக் கொள்ளலாம் என்று கவிதா ஆறுதல் கூறி வந்தபோதிலும் மனைவியின் சமாதானத்தை ஏற்காமல் அவர் தற்கொலை செய்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை செய்துகொண்ட மாணவர்கள்!
» ரெயில் முன் பாய்ந்து அதிகாரி தற்கொலை: அமைச்சரை அதிரடி டிஸ்மிஸ் செய்த பன்னீர்செல்வம்
» அப்துல் கலாம் மறைவு தந்த அதிர்ச்சி: தனியார் நிறுவன அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum