Top posting users this month
No user |
ரெயில் முன் பாய்ந்து அதிகாரி தற்கொலை: அமைச்சரை அதிரடி டிஸ்மிஸ் செய்த பன்னீர்செல்வம்
Page 1 of 1

நெல்லை வேளாண்துறை அதிகாரியின் தற்கொலை விவகாரத்தை அடுத்து தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர், பதவியில் இருந்து அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
திருநெல்வேலி திருமால்நகரைச் சேர்ந்த முத்துக்குமாரசாமி, வேளாண்மை பொறியியல்துறை செயற்பொறியாளர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார்.
வேளாண்துறை ஓட்டுநர் காலி இடங்களுக்கு நேர்மையான முறையில் இவர் நியமனங்களை மேற்கொண்டதால், வேளாண்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உதவியாளர்கள் எனக் கூறிக் கொண்ட சிலர், தாங்கள் பரிந்துரைக்கும் நபர்களுக்கே பணியிடம் வழங்க வேண்டும் அல்லது நீங்கள் பணிவழங்கும் நபர்களிடம் இருந்து பணம்பெற்று தரவேண்டும் என்று நெருக்கடி கொடுத்துள்ளனர்.
இதில் மனமுடைந்த அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையடுத்து இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வேளாண்மைத்துறை பணியாளர்கள், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், அக்ரி கிருஷ்ணமூர்த்தி வகித்து வந்த அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் பதவி 2 நாட்களுக்கு முன்னர் பறிக்கப்பட்டதோடு அதிரடியாக அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
மேலும், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பரிந்துரையை ஏற்று ஆளுநர் ரோசய்யா இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இதற்கிடையே முத்துக்குமாரசாமியின் தற்கொலைக்கு காரணமாக கூறப்படும் பணி நியமன விவகாரத்தில் நடந்தது என்ன? என்பது பற்றி உளவு பிரிவு பொலிசாரும் ரகசியமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இச்சம்பவம் பற்றி நெல்லை சந்திப்பு ரெயில் நிலைய பொலிசாரே வழக்கு பதிவு செய்திருந்த நிலையில், வழக்கு விசாரணை இன்னும் சட்டம்–ஒழுங்கு பிரிவுக்கு மாற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே விரைவில் அதிகாரி முத்துக்குமாரசாமியின் மரணம் குறித்து, விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum