Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஏமனில் இந்திய கப்பலை தாக்க வந்த போர் விமானம்..சுட்டு விரட்டிய இந்திய வீரர்கள்

Go down

ஏமனில் இந்திய கப்பலை தாக்க வந்த போர் விமானம்..சுட்டு விரட்டிய இந்திய வீரர்கள் Empty ஏமனில் இந்திய கப்பலை தாக்க வந்த போர் விமானம்..சுட்டு விரட்டிய இந்திய வீரர்கள்

Post by oviya Fri Apr 03, 2015 12:35 pm

ஏமனில் இருந்து மும்பை திரும்பிய தமிழர்கள், தங்களை தாக்க வந்த போர் விமானத்தை இந்திய வீரர்கள் சுட்டு விரட்டியதாக தெரிவித்துள்ளனர்.
ஏமனில் உள்நாட்டுப்போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு வேலை பார்க்கும் சுமார் 4 ஆயிரம் இந்தியர்கள் போர்ப் பிரதேசங்களில் சிக்கி தவித்து வருகின்றனர்.

இதையடுத்து அவர்களை பத்திரமாக மீட்டு வர மத்திய அரசு ‘ஆபரேஷன் ரஹத்’ என்ற பெயரில் அதிரடி நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

முதற்கட்டமாக ‘ஐ.என்.எஸ்.சுமித்ரா’ என்ற போர்க்கப்பல் மூலம், 40 தமிழர்கள் உள்பட 358 இந்தியர்கள் ஏமன் நாட்டில் உள்ள ஏடன் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்களில் 168 பேர் புதன்கிழமையன்று அண்டை நாடான ஜிபோட்டில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான ‘சி-17 குளோப் மாஸ்டர்’ போர் விமானம் மூலமாக கொச்சி அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அதில் வந்து சேர்ந்த 168 பேரில் 151 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள், 17 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.

மந்திரி கே.ஜி.ஜோசப் கூறுகையில், ஏமனில் இருந்து வந்திறங்கியவர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தேவையான அனைத்து போக்குவரத்து ஏற்பாடுகளையும் அரசு செய்துள்ளது.

மேலும், அவர்களுக்கு உடனடி உதவியாக கைச்செலவுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்குகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

ஏமனில் இருந்து 190 பேரை கொண்ட மற்றொரு இந்திய குழுவினர், ‘சி-17 குளோப் மாஸ்டர்’ போர் விமானம் மூலமாக நேற்று அதிகாலை 3.25 மணிக்கு மும்பை சர்வதேச விமான நிலையம் வந்துள்ளனர்.

அவர்களை மராட்டிய மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் பிரகாஷ் மேத்தா, கிரித் சோமையா எம்.பி., மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றுள்ளனர்.

மீட்கப்பட்ட தமிழர்கள் நிருபர்களிடம் கூறுகையில், எங்களை மத்திய அரசு இ-மெயில் மூலம் தொடர்பு கொண்டது. பின்னர் இந்திய கடற்படை மற்றும் விமானப்படையின் உதவியுடன் பத்திரமாக மும்பை வந்தடைந்தோம்.

எங்களை பத்திரமாக மீட்டு வந்த இந்திய அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

எனினும் எங்களை போன்று இன்னும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் அங்கு சிக்கியுள்ளனர். அவர்களையும் இந்திய அரசு மீட்டு வர வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

ஏமனில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த சென்னையை சேர்ந்த மகேஷ் என்பவர் கூறுகையில், நாங்கள் அனைவரும் இந்திய கப்பலில் ஏறி அமர்ந்து புறப்பட தயாராக இருந்தோம்.

அப்போது திடீரென போர் விமானம் ஒன்று எங்கள் கப்பலை வட்டமிட்டதால் கலக்கம் அடைந்தோம். இருப்பினும் இந்திய கடற்படை வீரர்கள் அந்த விமானத்தை நோக்கி சரமாரியாக சுட்டனர்.

இதையடுத்து எங்களை வட்டமிட்டு கொண்டு இருந்த போர் விமானம் அங்கு இருந்து சென்று விட்டது. அதன் பின்னர் தான் நிம்மதி பெருமூச்சு விட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum