Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பிறந்த ஆறே நாட்களில் ஏமனில் இருந்து தப்பி வந்த குழந்தை

Go down

பிறந்த ஆறே நாட்களில் ஏமனில் இருந்து தப்பி வந்த குழந்தை Empty பிறந்த ஆறே நாட்களில் ஏமனில் இருந்து தப்பி வந்த குழந்தை

Post by oviya Sat Apr 11, 2015 1:04 pm

ஏமனில் உள்நாட்டு போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால், அங்கு சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
‘ஆபரேஷன் ரஹத்’ என்ற பெயரில் இந்திய பாதுகாப்பு படையினர் மேற்கொண்டு வரும் இந்த மீட்பு நடவடிக்கை மூலம் இதுவரை 4600–க்கும் அதிகமான இந்தியர்களும், 960 வெளிநாட்டினரும் மீட்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த ராஜி என்ற நர்சு ஏமனில் உள்ள அம்ரான் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். அவருக்கு கடந்த 6 நாட்களுக்கு முன் அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் உடல் நலம் சரியில்லாததால் குழந்தையையும், தாயையும் உடனே மீட்டு வர முடியவில்லை.

பார்வதி என பெயரிடப்பட்ட அந்த குழந்தையும், அதன் பெற்றோர் சசி–ராஜி ஆகியோரும் சனாவில் இருந்து மறுநாள் மீட்கப்பட்டு ஜிபோட்டி நாட்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் நேற்று கொச்சிக்கு அழைத்து வரப்பட்டனர். இதன்போது ஜிபோட்டியில் உள்ள இந்திய அதிகாரிகள் உமா நம்பியார் என்ற வைத்தியரையும் குழந்தையுடன் அனுப்பி வைத்தனர்.

அதன்படி இன்குபேட்டரில் வைத்து கொண்டு வரப்பட்ட குழந்தையையும், அதன் தாயையும், கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அதிகாரிகள் சேர்த்தனர்.

தற்போது குழந்தையின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum