Top posting users this month
No user |
Similar topics
கற்பித்தலில் புதிய கண்டுபிடிப்பு: அமெரிக்க வாழ் இந்திய பேராசிரியைக்கு சிறப்பு விருது
Page 1 of 1

புதுமையான கற்பித்தல் முறைகளுக்காக அமெரிக்க வாழ் இந்தியரான உதவி பேராசிரியைக்கு மதிப்புமிக்க பெல்டியர் விருது (The Peltier Award) கிடைத்துள்ளது.
இந்தியாவில் பிறந்த ரஜனி கணேஷ் பிள்ளை, புனே கல்லூரியில் வணிக நிர்வாகத்தில் இளங்கலை பட்டம் பெற்று பின்னர், அமெரிக்காவின் கன்சாஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டத்தையும், புளோரிடா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றவர் ஆவார்.
தற்போது, இவர் வடக்கு டகோடா மாநில பல்கலைக்கழகத்தில் மார்க்கெட்டிங் குறித்து மாணவர்களுக்கு கற்பித்து வருகிறார்.
இந்நிலையில் இவர், வர்த்தகத்தில் கலாச்சாரத்தின் பங்கு குறித்தும் அது எப்படி பரிவர்த்தனைகள் மற்றும் வர்த்தக உறவுகளை பாதிக்கிறது என்பதையும் விளக்கும் வகையில் ‘பஃபா பஃபா’ ("Baffa Baffa”) என்ற விளையாட்டு ஒன்றினை உருவாக்கியுள்ளார்.
வர்த்தக அறிஞர்கள் பலர் இது மாணவர்கள் மார்க்கெட்டிங் குறித்த முடிவுகளை எடுப்பதற்கு மிகவும் உதவிகரமாக இருப்பதாக பாராட்டியுள்ளனர்.
மேலும், இவரது இந்த பங்களிப்பை கௌரவிக்க, புதுமையான கற்பித்தல் முறைகளுக்கான மதிப்புமிக்க பெல்டியர் விருதை அளிக்க உள்ளதாக வடக்கு டகோடா மாநில பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» செயற்கை கல்லீரல் உருவாக்கி சாதனை: அமெரிக்க வாழ் இந்திய பெண் விஞ்ஞானிக்கு விருது
» அமெரிக்கா வாழ் தமிழருக்கு பத்திரிகை துறைக்கான புலிட்சர் விருது
» இஸ்ரேலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ராணுவ வீரருக்கு வீரதீர விருது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum