Top posting users this month
No user |
Similar topics
மைத்திரியின் நேர்மையை கண்டு வியக்கும் மகிந்த சமரசிங்க
Page 1 of 1

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேர்மையானவர் எனவும், உலகிலுள்ள எந்தவொரு ஜனாதிபதியும் இவரை போல் இல்லை எனவும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசியலமைப்பின்படி ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரம் கொண்டவர்.
ஆனால் இந்த அதிகாரத்தை குறைக்க வேண்டும் என தெரிவித்து வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நாம் போற்றி துதிக்க வேண்டும் எனவும், தனது சொந்த விருப்பத்திற்கு தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை குறைத்து கொள்ளும் எந்தவொரு தலைவரையும் தான் சந்தித்ததில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த நடவடிக்கை அவருக்கு வாக்களித்த மக்கள் பெற்ற வெற்றி என அவர் தெரிவித்துள்ளதுடன்,
தற்போதைய அரசு ஒரு சிறுபான்மை அரசு என்பதினாலேயே தேசிய அரசாங்கம் ஒன்று நிறுவப்பட்டது, இது ஒரு நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டே நிறுவப்பட்டது, இதனை யாராலும் எதிர்க்க முடியாது.
பிற நாடுகளின் முதலீடுகளை திரட்டும் நோக்கில் முதலீட்டாளர்களின் ஊடாக ஒப்பந்தங்களை கைச்சாத்திடுவது ஒரு நாட்டின் அரசியல் ஸ்தீரத்தன்மையை புலப்படுத்துகிறது என அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மத்திய குழு தீர்மானித்த பின்னரே தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொண்டதுடன், அதன் அமைச்சு பதவிகளையும் ஏற்று கொண்டது என விளக்கமளித்த அமைச்சர்,
நான் ஜனாதிபதியை தனிப்பட்ட முறையில் சந்தித்து எனக்கு அமைச்சு பதவி வழங்குமாறு கேட்கவில்லை, இதனை யாரும் ஏற்று கொள்ளவும் மாட்டார்கள், இந்த முடிவு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாம் மத்திய செயற்குழு கூட்டத்தின் போது தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்வது தொடர்பில் மும்முறை கருத்துக்களை கேட்டறிந்தோம், இதற்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மாத்திரமே எதிர்ப்பு தெரிவித்த போதிலும் ஏனையவர்கள் ஆதரவளித்தனர்.
அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனும் நோக்கிலேயே தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் வாக்களித்துள்ளனர்.
எனவே இம்மக்களுக்கு தம்மாலான சேவைகளை வழங்குவதற்காகவே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் குறித்த அமைச்சு பொறுப்புக்களை ஏற்று கொண்டனர் எனவும்,
தற்போது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை காணப்படுவதினால் 19வது அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கு எவ்வித சிக்கல் நிலையும் ஏற்படாது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் ஆட்சி காலத்தின் போதும் தேசிய அரசாங்கமொன்றை நிறுவுவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சிகளுக்கிடையில் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது எனினும் ஐக்கிய தேசிய கட்சி திடீரென இதிலிருந்து தன்னை விலக்கி கொண்டது.
இந்நிலையில் மனோ, மாலிக் பேச்சுவார்த்தைகளின் போது தேசிய அரசாங்கமொன்றை நிறுவுதல் பிரபல்யமடைந்தது.
ஐக்கிய தேசிய கட்சி இந்த உடன்படிக்கையிலிருந்து விலகி கொண்டமையினால் தேசிய அரசாங்கம் நிறுவப்படவில்லை. ஆனால் தேசிய அரசாங்கம் குறித்து ஒருமித்த கருத்துக்களே காணப்பட்டன என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய செயற்குழு கூட்டம் நடைபெறும் போது தேசிய அரசாங்கத்திற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட முடியும்.
எனினும் தேசிய அரசாங்கத்திற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என இரத்தினபுரி கூட்டங்களுக்கு செல்வதில் எவ்வித நியாயமும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளதுடன்,
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மூத்த உறுப்பினர்களான நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா, ஆகியோர் தொடர்ந்தும் எதிர்கட்சியில் இருக்க தீர்மானித்தமையினாலேயே அமைச்சு பதவிகளை பொறுப்பேற்கவில்லை என தெரிவித்தார்.
இது அவர்களின் சுய விருப்பத்துடன் எடுக்கப்பட்ட முடிவு என்பதுடன் அரசாங்கத்திலிருந்தாலும், எதிர்கட்சியிலிருந்தாலும் மக்களுக்கு சேவையாற்ற முடியும் என அவர் தெரிவித்ததுடன்,
அதில் ஏதும் தவறு இருப்பதாக கூறமுடியாது என குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 30 வருட யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்தவர், அவர் வரலாற்றில் கீழே போகமாட்டார், நாட்டில் பயங்கரவாதத்தை முறியடித்து நாட்டின் மகத்தான வளர்ச்சிக்கு அரும்பாடுப்பட்ட ஒரு தலைவர் எனினும் மைத்திரிபால சிறிசேனவும் நேர்மை மிக்க தலைவர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்கிறார் அமைச்சர் மகிந்த சமரசிங்க.
சில காரணங்களினால் முன்னாள் ஜனாதிபதிக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தினரின் வாக்குகளை பெற்று கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
நாட்டில் மாற்றம் தேவை என எண்ணிய குறிப்பிட்ட சிலரின் நடவடிக்கை.
தற்போது அமைச்சு பதவிகளை பெற்று கொண்டவர்கள் நாட்டில் மக்களின் சேவைகளை கருத்திற்கொண்டு செயற்பட்டால் எதிர்வரும் பொது தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்வரும் பொது தேர்தலில் போட்டியிட விரும்பினால் தனிப்பட்ட முறையில் அதற்கான விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும் என அமைச்சர் மகிந்த சமரசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மைத்திரியின் கொள்கைகள் சர்வதேசத்தின் பாராட்டை பெற்றுள்ளன: மகிந்த சமரசிங்க
» மஹிந்தவின் பேரணியில் கலந்துகொள்ள மாட்டேன்: மஹிந்த சமரசிங்க
» மகிந்தவின் குற்றங்களை கண்டு கொள்ளாத ரணில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum