Top posting users this month
No user |
Similar topics
கண்டாவளை மத்திய வகுப்புத் திட்ட காணிப் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு: சிறீதரன் எம்.பி உறுதி
Page 1 of 1

கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்துக்குட்பட்ட கிராமங்களில் மத்திய வகுப்பு திட்ட காணிகளில் காணப்படுகின்ற காணி உரிமம் இன்மை, வீட்டுத்திட்டம் வழங்கப்படாமை போன்ற பிரச்சனைகள் தொடர்பாக இன்று கலந்துரையாடப்பட்டது.
கண்டாவளை பிரதேச செயலர் முகுந்தன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில், பா.உறுப்பினர் சி.சிறீதரன், வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, மாவட்ட காணி உயர் அதிகாரிகள், கண்டாவளை பிரதேச செயலர் வகுதிக்கு உட்பட்ட கிராம சேவையாளர்கள், திட்டமிடல் அதிகாரிகள், கண்டாவளை, உழவனூர் நாதன் திட்டம், கல்மடு, முரசுமோட்டை, கோரக்கன் கட்டு, பரந்தன், புன்னை நீராவி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள், மாதர் கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள், கமக்கார குழுக்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
கண்டாவளை பிரதேச செயலர் முகுந்தன்,
மத்திய வகுப்பு திட்ட காணிகளில் வாழ்ந்து வருகின்றவர்களுக்கு வீட்டுத்திட்டம் மற்றும் ஏனைய அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதில் உள்ள பிரதான பிரச்சனையாக கருதப்படுகின்ற காணி உரிமம் தொடர்பாகவும் அதை பெறக்கூடிய வழிவகைகளுக்கான முயற்சிகள் பற்றியும் வலியுறுத்தினார்.
அவற்றை நடைமுறைப்படுத்தக்கூடிய அதிகாரம் பா.உறுப்பினர்களிடமுமே இருப்பதாக தெரிவித்தார். இதேவேளை தனது அதிகார எல்லைக்குட்பட்ட வகையில் தீர்க்ககூடிய வழிவகைகள் பற்றியும் தெரிவித்தார்.
அங்கு வந்திருந்த பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கருத்துக்கள் தெரிவிக்கும்போது,
பல தசாப்தங்களாக கண்டாவளையில் மத்திய வகுப்பு திட்ட காணிகளில் குடியிருந்து வான் பயிர்கள் உருவாக்கி போராலும் பாதிக்கப்பட்ட நாம் இன்றும் வீட்டுத்திட்டம் மற்றும் அபிவிருத்திகளை அடைவதற்கு காணி உரிமம் ஒரு தடையாக இருப்பதாகவும் அதை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்
அத்தோடு ஆறுமாதத்திற்கான தற்காலிக வீடுகளில் நாம் ஐந்து வருடங்களாக வாழ்கின்றோம் என்றும் அதற்கும் நிரந்தர தீர்வு பெற்றுத்தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
இங்கு கருத்துத்தெரிவித்த கல்வி அமைச்சர் குருகுலராஜா,
சுதந்திரம் அடைவதற்கு முன்பு பிரித்தானிய ஆட்சியின் கீழ் உயர்பதவிகளில் இருந்த அரச ஊழியர்களுக்கு இங்கு வழங்கப்பட்ட மத்திய வகுப்பு திட்ட காணிகள் குறித்தும் அதில் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு தேவைப்படுகின்ற காணி உரிமையாளரின் உரிமை மாற்றம் தொடர்பிலும் நாம் சில சட்டங்கள் காணி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தையிலும் தீர்வை பெற முயற்சி வேண்டியிருக்கின்றது என தெரிவித்தார்.
அதற்கு தன் ஒத்துழைப்பை வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
பிரதேச செயலர், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்டறிந்த பா.உறுப்பினர் சி.சிறீதரன் குறிப்பிடுகையில்,
இந்த மத்திய வகுப்பு காணி தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு காண பிரதேச செயலரின் ஒத்துழைப்புடன், காணி உரிமையாளர்களின் விபரங்களை காணி தொடர்பான அதிகாரிகளிடம் பெறவேண்டும்.
அத்துடன் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் இணைந்து காணி உரிமையாளர்;கள் அல்லது அவர்களது பின்னுரித்தாளர்களை சந்தித்து மனிதாபிமான அடிப்படையின் அவர்களின் சம்மதத்துடன் தற்பொழுது இருக்கின்றவர்களுக்கான காணி உரிமைக்கான தீர்வை பெறவேண்டியது தேவையாக இருக்கின்றது.
அடுத்து காணி சுவீகரிப்பின் மூலம் காணியற்றவர்களுக்கான பிரச்சினைக்கான தீர்வு காணும் பின்ணணியில் இருக்கக்கூடிய தேசிய ரீதியிலான தமிழர்களுக்கு ஏற்படக்கூடிய பாதக சூழல் குறித்தும் நாம் சிந்திக்கவேண்டியவர்களாக இருக்கின்றோம்.
தற்பொழுது இங்கு கருத்துக்களை கேட்டறிந்த நிலையில் கிராம சேவகர் பிரதேச செயலர் மட்டத்திலும் தீர்க்ககூடிய மத்திய வகுப்பு காணி பிரச்சனைகளும் இங்கு இனங்காணப்படுப்பட்டுள்ளன.
அதை பிரதேசசெயலர் விரைவில் தீர்;ப்பதாக உறுதி அளித்துள்ளார். மத்திய வகுப்புத்திட்டக்காணிகளில் வாழுகின்ற மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற வீட்டுத்திட்டம் கிடைக்காதோ காணி உரிமை கிடைக்காதோ என்ற ஏக்கங்களுக்கு விரைவில் தீர்வு அளிக்கப்படும் என என்னால் உறுதி அளிக்கமுடியும் என தெரிவித்த பா.உறுப்பினர் சி.சிறீதரன், இது தொடர்பாக காணி அமைச்சு மட்டத்திலும் வடக்கு முதலமைச்சர் தூதரக மட்டத்திலும் கலந்துரையாடி வருவதாக தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கண்டாவளை பிரதேசத்துக்கு பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவு திட்ட ஒதுக்கீட்டு பொருட்கள் வழங்கல்!
» சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காண்பேன்: யோகேஸ்வரன் வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களுக்கு உறுதி
» லயன் வாழ்கைக்கும், வீட்டு பிரச்சினைக்கும் தீர்வு காண்பேன்: மஹிந்த - ராஜபக்ஷ 9ம் திகதி தீர்வு காண்பார்: தொண்டமான்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum