Top posting users this month
No user |
Similar topics
லயன் வாழ்கைக்கும், வீட்டு பிரச்சினைக்கும் தீர்வு காண்பேன்: மஹிந்த - ராஜபக்ஷ 9ம் திகதி தீர்வு காண்பார்: தொண்டமான்
Page 1 of 1

பெருந்தோட்டங்களில் ஒரு தேயிலை கொழுந்தை கூட பிடுங்குவதற்கு நான் அனுமதியளிக்க மாட்டேன் என உறுதியாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன். இன்று சிலர் இந்த துறையை இல்லாதொழிப்பதற்கு கங்கணம் கட்டிக் கொண்டுள்ளனர். அதற்கு அனுமதியளிக்க முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த கூட்டம் ஒன்று நேற்று நுவரெலியா நகர மத்தியில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், சீ.பீ.ரத்நாயக்க பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம், மாகாண அமைச்சர்களான ராம்,செந்தில் தொண்டமான் என பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து ஜனாதிபதி அங்கு உரையாற்றுகைளில்,
இந்த கடும் மழையிலும் நீங்கள் அனைவரும் வந்து எமக்கு ஆதரவு தருவதற்கு எனது நன்றிகளை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
எதிர்வரும் 8ம் திகதி நடைபெறும் தேர்தல் இந்த நாட்டின் தீர்கக்கமான ஒரு தேர்தல். என்னுடன் போட்டியிட யாரும் இல்லாததன் காரணமாக எங்கள் அணியில் உள்ள ஒருவரை போட்டியிட வைத்துள்ளனர்.
இந்த அரசாங்கத்தில் நல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும் அதற்கு நாம் அனைவரும் பொறுப்புக் கூற வேண்டும்.
ஆனால் ஒருவர் திடீரென மாற்று அணிக்கு சென்று நல்லவர் போல் நடிக்கின்றார். நாம் மட்டும் குற்றம் செய்தவர்கள் போல அவர் செய்த பிழைகளுக்கும் நாங்கள் தற்போது பதில் சொல்ல வேண்டும்.
யுத்தம் முடிவடைந்த காரணத்தால் இன்று அனைவரும் சந்தோசமாக வாழும் ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.
நான் தற்போது வீட்மைப்பு வேலை திட்டத்தை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அல்லது நகர அபிவிருத்தி அதிகாரசபையிடம் ஒப்படைத்துள்ளேன்.
இதன் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது கட்ட வேலைகள் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்றன.
இன்னும் ஒரு சில மாதங்களில் உங்களை அந்த லயன் அறைகளில் இருந்து உங்களை வெளியேற்றி, வீட்டு பிரச்சினைக்கு தீர்வு காண்பேன் என இதன்போது கூற விரும்புகின்றேன்.
அனைவருக்கும் சொந்த வீடொன்று இருக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கின்றேன் என்றார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 9ம் திகதி தோட்டப் புறங்களில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பார்: தொண்டமான்
மலையகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டுமென்றால் அது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மாத்திரமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும் வேறு யாராலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த கூட்டம் நேற்று நுவரெலியா நகர மத்தியில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் நடைபெற்றது இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் இங்கு உரையாற்றுகையில்,
மலையகத்தில் பல அபிவிருத்திகள் திட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. இன்னும் பல அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டுமென்றால் அது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மாத்திரமே முடியும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியது போல் உங்களுக்கு தனி வீடு காணி உரிமை நிச்சயமாக கிடைக்கும்.
9ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகியவுடன் தோட்டப் புறங்களில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுப்பார். என்றார்.
நுவரெலியாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரக் கூட்டம், இலங்கை தொழிலாளர் காங்கிஸின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் நுவரெலியாவில் இன்று நடைபெற்றது.
இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம், ஊவா மாகாண சபை அமைச்சர் செந்தில் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காண்பேன்: யோகேஸ்வரன் வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களுக்கு உறுதி
» சுதந்திர கட்சியை பாதுகாத்து தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவேன்: மஹிந்த ராஜபக்ஷ
» 200 வருட லயன் குடியிருப்பு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி: மலையக அரசியல்வாதிகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum