Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தீராத நோயினால் பாதிக்கப்பட்ட மகனை எரித்துக்கொன்று தற்கொலை செய்த தாய்

Go down

தீராத நோயினால் பாதிக்கப்பட்ட மகனை எரித்துக்கொன்று தற்கொலை செய்த தாய் Empty தீராத நோயினால் பாதிக்கப்பட்ட மகனை எரித்துக்கொன்று தற்கொலை செய்த தாய்

Post by oviya Mon Mar 23, 2015 1:30 pm

திருச்சியில் தாய் ஒருவர் மகனின் தீராத நோயால் விரக்தியடைந்து மகனை எரித்துக்கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருச்சி மேலசிந்தாமணி சுப்பிரமணியசாமி கோவில் தெருவில் கணேசன் (53) என்ற சமையல் வேலை செய்யும் நபர் மனைவி விஜயலட்சுமி (45) மற்றும் 15 வயது மகன் மணிகண்டனுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இவர்களது மகன் மணிகண்டன் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தபோது திடீரென எலும்புருக்கி என்னும் நோய் தாக்கியுள்ளது.

இந்த நோயினால் அந்த சிறுவனுக்கு எலும்பும், சதையும் உருகிக்கொண்டே போனதால், கணேசன் தம்பதியினர் தங்களது மகனை பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.

ஆனால் அவனுக்கு எந்த முன்னேற்றமும் ஏற்படாததோடு, ஒருகட்டத்தில் மணிகண்டனால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பள்ளி படிப்பை நிறுத்தி விட்டு, சிறுவனை தினமும் குளிப்பாட்டி, சாப்பாடு கொடுத்து கணேசனும், அவரது மனைவியும் வீட்டிலேயே கவனித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சமையல் வேலைக்காக கடந்த வெள்ளிக்கிழமை கணேசன் ஸ்ரீரங்கத்திற்கு சென்றுள்ளார்.

நேற்று அதிகாலை விஜயலட்சுமியின் வீட்டில் இருந்து கரும்புகை வெளியே வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது வீட்டிற்குள் விஜயலட்சுமியும், அவரது மகனும் கரிக்கட்டையாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த கோட்டை பொலிசார், இருவரின் உடல்களையும் பார்வையிட்டபோது மணிகண்டனின் உடல் முழுவதுமாக எரிந்தும், விஜயலட்சுமியின் கால் பகுதி மட்டும் லேசாக எரியாமலும் இருந்தது.

பின்னர் இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில், மணிகண்டனுக்கு ஏற்பட்ட நோய் குணமடையாததால் மனவேதனை அடைந்த தாய் மணிகண்டனை எரித்துக்கொன்று, தானும் தீக்குளித்து தற்கொலை செய்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum