Top posting users this month
No user |
Similar topics
மனைவியுடன் கள்ளக்காதல்: கல்லூரி மாணவரை தீர்த்துக் கட்டிய மதபோதகர்
Page 1 of 1

ஈரோடில் தனது மனைவியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவரை மதபோதகர் கொலை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தடப்பள்ளி வாய்க்காலில் கடந்த 8ம் திகதியன்று, ஆண் பிணம் ஒன்று மிதந்துள்ளது.
இதையடுத்து பொலிசார் நடத்திய விசாரணையில், இறந்த நபர் கொங்கர்பாளையத்தை சேர்ந்த ராஜன் என்பவரின் மகன் அருளாளன் (25) என்பது தெரியவந்துள்ளது.
அருளாளன் கோபியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.ஏ. முதலாம் ஆண்டு படித்துவந்துள்ளார்.
அருளாளனுக்கு நீச்சல் நன்கு தெரியும் என்பதால் அவர் வாய்க்காலில் விழுந்து இறந்திருக்க முடியாது என்று உறுதியாக நம்பிய பொலிசார் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.
அதில், அருளாளனை கோபியை சேர்ந்த மதபோதகரான பாஸ்டர் பிராங்கிளின்பால் கொலை செய்ததும், இந்த கொலைக்கு கல்லூரி மாணவர்கள் 3 பேரும், வேன் ஓட்டுனர் ஒருவரும் உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது.
மேலும் விசாரணையில், கிறிஸ்தவ ஆலயத்திற்கு அருளாளன் சென்று வந்தபோது அவருக்கும், பிராங்கிளின்பாலுக்கும் பழக்கம் ஏற்பட்டதால், அருளாளன் அடிக்கடி பிராங்கிளின்பால் வீட்டிற்கு சென்றுவந்துள்ளார்.
இந்நிலையில் அருளாளனுக்கும், கவுரிக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் பிராங்கிளின்பாலுக்கு தெரியவந்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் கவுரி தனது கணவரை பிரிந்து கோவையில் வசித்து வந்த நிலையில், அருளாளன் கொங்கர்பாளையத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்துள்ளார்.
இதை அறிந்த பிராங்கிளின்பால் கோபத்தை வெளிக்காட்டாமல் அருளாளனுடன் பழகி வந்தார்.
இதற்கிடையே அருளாளனின் காதலிக்கும், பிராங்கிளின்பாலுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் பிராங்கிளின்பால் தன் மனைவியிடம் விவகாரத்து பெற்ற பிறகு காதலியை திருமணம் செய்து கொள்ள விரும்பியதோடு, இதற்கு அருளாளன் தடையாக இருப்பதாக எண்ணியுள்ளார்.
எனவே அருளாளனை கொலை செய்ய திட்டமிட்ட அவர், மாணவர்கள் மூன்று பேரின் உதவியுடன் கடந்த 6ம் திகதி, விஷம் கலந்த குளிர்பானத்தை அவருக்கு கொடுத்துள்ளனர்.
பின்னர் மயங்கி விழுந்த அவரை, கிறிஸ்தவ ஆலய வேன் ஓட்டுனர் ஜான் என்பவர் உதவியுடன் பிராங்கிளின்பால் வேனில் ஏற்றிச் சென்றபோது அவர் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து அவரது உடலை தடப்பள்ளி வாய்க்காலில் வீசிவிட்டு அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
மேலும், அருளாளனை கொலை செய்த மதபோதகர் பிராங்கிளின்பால், வேன் ஓட்டுனர் மற்றும் 3 மாணவர்கள் என மொத்தம் 5 பேரை பொலிசார் கைது செய்து கோபிசெட்டிபாளையம் முதலாம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கள்ளக்காதல் விவகாரம்: காதலனுக்கு தாய்ப்பால்…மகனாக கருத வேண்டும் என தீர்ப்பு
» அமெரிக்காவில் ஐபோனுக்காக இந்திய மாணவரை சுட்டுக்கொன்ற மர்ம கும்பல்
» கள்ளக்காதல் விவகாரம்: மாணவர்கள் முன்னிலையில் அடித்துக்கொண்ட ஆசிரியர்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum