Top posting users this month
No user |
Similar topics
கயிறுடன் விமல்: தூக்கில் தொங்க மறுக்கிறார் ரஞ்சன்
Page 1 of 1

சமூக சேவைகள், நலன்புரி மற்றும் கால்நடை வளர்ப்பு அபிவிருத்தி பிரதி ரஞ்சன் ராமநாயக்க சொன்னது போல தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதற்கு கயிறு தருகிறேன். தற்கொலை செய்து கொள்ள அவர் ஆயத்தமா என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கேள்வியெழுப்பியுள்ளார்.
மஹிந்தவுக்கு ஆதரவு தெரிவித்து கடந்த வெள்ளியன்று கண்டியில் பேரணியொன்று இடம்பெற்றது.
இப்பேரணிக்கு 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்டால் தான் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்வதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்திருந்தார்.
குறித்த பேரணிக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையிலேயே கயிறு தயாராகவுள்ளது தாங்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள தயாரா என விமல், ரஞ்சனிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதேவேளை மக்கள் கூட்டத்தை காட்டி மக்களை தவறான பாதைக்கு அழைத்து செல்ல குறித்த குழு முயற்சிப்பதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் நான் அவ்வாறான ஒரு சவால் விடுக்கவில்லை, அவ்வாறு சவால் விட்டிருப்பின் அதனை நிரூபித்து காட்டுமாறும், இது தொடர்பில் தன்னுடன் விவாதத்திற்கு வருமாறும் பிரதி அமைச்சர் விமலுக்கு சவால் விடுத்துள்ளார்.
விமல் கூறியது முற்றிலும் உண்மைக்கு புறம்பான கருத்து, அரசியல் அனாதைகளாக்கபட்ட விமல் வீரவன்ச, கம்மன்பிலவின் அறிவித்தல்களுக்கு பதலளிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை என ரஞ்சன் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களின் பேரணிகளுக்கு மக்களை அழைத்துவருவதற்கு 122 பஸ்களை பயன்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ராஜித சேனாரத்ன தெரிவித்ததை ரஞ்சன் சுட்டிகாட்டியுள்ளார்.
மேலும் பேரணிக்கு அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவையில் இருந்து மக்களை அழைத்து வந்ததாக புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதேவேளை ஜனாதிபதி தேர்தலில் நான்கரை இலட்ச வாக்குகளில் மகிந்த தோல்வியுற்றார் என்பதையும் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் இணையத்தளங்கள் ஊடாக தனக்கு சேரறு பூசுவதற்காக பல விதமான முயற்சிகளை மேற்கொண்டார்கள் என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» விமல் வீரவன்சவிற்கு எதிராக ரஞ்சன் ராமநாயக்க முறைப்பாடு
» இலங்கைக் கலைஞர்களை அரசாங்கம் இழிவுபடுத்தியுள்ளது: ரஞ்சன் ராமநாயக்க
» சம்மாந்துறையில் பாடசாலை மாணவி தூக்கில் தொங்கி உயிரிழப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum